Close
செப்டம்பர் 20, 2024 1:33 காலை

அகவிலைப் படியை நிலுவையின்றி வழங்க வேண்டும்: ஓய்வூதியர்கள் சங்க மாநாடு வலியுறுத்தல்

புதுக்கோட்டை

அகவிலைப் படியை நிலுவையின்றி வழங்குக. ஓய்வூதியர்கள் சங்க மாநாடு வலியுறுத்தல்

அகவிலைப்படியை நிலுவையின்றி வழங்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது.

ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம்  மாவட்ட மாநாடு  புதுக்கோட்டையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். இணைச்செயலாளர் கணேசன் வரவேற்றார்.

திருச்சி மாவட்ட செயலாளர் பா.கிருஷ்ணன், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்‌ சங்கம் மாவட்டத்தலைவர் மு.முத்தையா, மாவட்டக்கல்வி‌ அலுவலர் (ஓய்வு) இராஜேந்திரன்,‌ ‌தமிழாசிரியர் (ஓய்வு) கு.ம.திருப்பதி  , உதவி தொடக்கக்கல்வி அலுவலர் (ஓய்வு)இராமச்சந்திரன், ‌ தலைமை ஆசிரியர் (ஓய்வு) காந்திநாதன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மேனாள் மாவட்டத் தலைவர் கருப்பையா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாநிலப் பொதுச் செயலாளர் எஸ். பிரபாகரன் சிறப்ரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் நா.கிருஷ்ணன் நன்றி கூறினார்.

மாநாட்டில், கேரளா, ஆந்திர அரசுகளைப் போல அறுவை சிகிச்சை மட்டுமின்றி அனைத்து சிகிச்சைகளுக்கும் செலவு தொகையை மீளப் பெரும் வகையில் காப்பீட்டு திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். அகவிலைப்படி நிலுவைத் தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும்.

குடும்ப நல நிதியை ஒரு லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். 70 வயது பூர்த்தியான ஓய்வூதியர்களுக்கு 10 விழுக்காடு கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும். மாதந்தோறும் மருத்துவ படியை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top