Close
நவம்பர் 22, 2024 12:02 காலை

ஆலங்குடியை சுற்றி புறவழிச்சாலை அமைக்க நிலம் அளவீடுபணிக்கு விவசாயிகள் எதிர்ப்பு

புதுக்கோட்டை

திருவரங்குளம் ஒன்றியம் ஆலங்குடியை சுற்றி புறவழிச்சாலை அமைக்க சிக்கப்பட்டி மேலாத்தூர் பகுதிகளில் விவசாய நிலங்களை அளவீடு செய்வதை தடுத்த விவசாயிகள்

திருவரங்குளம் ஒன்றியம் ஆலங்குடியை சுற்றி புறவழிச் சாலை அமைக்க சிக்கப்பட்டி மேலாத்தூர் பகுதிகளில் விவசாய நிலங்களை அளவீடு செய்ய வந்தவர்களுக்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆலங்குடி அருகே சிக்கப்பட்டி மேலாத்தூர் பகுதிகளில் உள்ள விளை நிலங்களை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை,  விவசாயிகள் மற்றும் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியை (RCP)சேர்ந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தினேஷ் குமார் மற்றும்  கட்சி  நிர்வாகிகள், அதிகாரிகளை முற்றுகையிட்டு விவசாய நிலங்களில் புறவழிச் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

அரசு நிலங்கள் 100 ஏக்கருக்கும் மேல் இருப்பதால் அந்த நிலங்களில் புறவழிச் சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள்.விவசாய நிலங்களில் அதிகாரிகள் புறவழிச்சாலை அமைத்தால் விவசாயிகளுடன் சேர்ந்து புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும் என புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி  நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top