புதுக்கோட்டை மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட தலைமை தபால் நிலையம் அருகில் மத்திய அரசின் துரோகத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோரிக்கைகள்: கல்வி அரசு வேலை வாய்ப்புகளில் உயர் வகுப்பினர் மற்றும் முன்னேறிய சமுதாயங்களின் உள்ள ரூபாய் 66 ஆயிரம் மாத வருமானத்திற்கு கீழ் உள்ளவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு அளித்ததை கண்டித்தும்.
பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களுக்கு கொடுக்கப்பட்ட 27% இட ஒதுக்கீட்டில் 30 வருடங்களுக்கு மேலாக 12 சதவீத இட ஒதுக்கீட்டை இன்றும் நிரப்பாததை கண்டித்தும்.
தொடர்ந்து மறுக்கப்படும் உரிமைகளை பெற்றிடவும், தமிழக அரசு உடனடியாக ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்தி மக்கள் தொகை அடிப்படையில் அந்தந்த சமூகத்திற்கான இட ஒதுக்கீடு தர வலியுறுத்தியும் புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப் பாளர் மூ. சரவண தேவா தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் வெள்ளாளர் அனைத்து வேளாளர் சங்க மாவட்ட செயலாளர் நிலா மணியன், இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், பார்க்கவா குல உடையார் சங்க மாநில செயலாளர் ஆனந்த் மாணிக்கம், மாவட்ட செயலாளர் பெருமாள், யாதவர் எழுச்சி பேரவை தலைவர் சின்னத்தம்பி யாதவ், வீர சைவ பேரவை மாவட்ட பொருளாளர் சதாசிவம் , மாவட்ட செயலாளர் செல்வராஜ்,
கந்தர்வகோட்டை கள்ளர் சமூக பேரவை கண்ணன், வல்லநாட்டு செட்டியார் சங்கம் கணேசன் பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு ஓய்வு ராணுவ வீரர் பாளையன், வீரசிங்க முத்தரையர் சங்க நிறுவனத் தலைவர் டாக்டர் மு க திருமுருகன், அகமுடையார் சங்கம் கீர்த்தனா.
நமது மக்கள் கட்சி மாநில விவசாய சங்க தலைவர் பட்டுக்கோட்டை குணசேகரன், மாநில இளைஞரணி செயலாளர் ஏவூர் ராஜேஷ் கண்ணா, மாநில மகளிர் அணி செயலாளர் மாலா ஆறுமுகம், சீர் மரபினர் நலச்சங்கம் மாநிலத் தலைவி சத்யா பொன்னழகன்.
நமது மக்கள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் இராம சுரேஷ்வர்மன், நமது மக்கள் கட்சி அலுவலக செயலாளர் மாவட்ட இளைஞரணி செயலாளர் செல்ல விக்னேஷ், மஞ்சாடியார் தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் திருஞானம் , மாவட்ட துணைத் தலைவர் தனராஜ், குன்னாண்டார் கோவில் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், உள்பட 200 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.