Close
நவம்பர் 22, 2024 11:40 காலை

புதுக்கோட்டை அருகே செயல்பட்டு வரும் தனியார் கல்குவாரியை அகற்றக் கோரிக்கை

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே வத்தனாகுறிச்சி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் கல்குவாரியை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பொதுமக்கள்

புதுக்கோட்டை அருகே வத்தனாகுறிச்சி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் கல்குவாரியை அகற்றக் கோரி அப் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை வத்தனக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட ரத்னா குறிச்சி, வெவ்வயல்பட்டி மற்றும் ஆதிதிராவிட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு அருகே தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது.

இதில் பி.சாண்ட், தார் பிளாண்ட், கல்குவாரி ஆகியவை இயங்கி வருகிறது. கல்குவாரியில் வெடி வைப்பதனால் அருகில் உள்ள வீடுகள் அதிர்வில் வெடிப்பு ஏற்படுவதாகவும் ஏராளமான தூசிகள் வெளிவருவதால் சாப்பாடு குடிக்கும் தண்ணீர் மற்றும் குளங்களில் மாசடைவதாகவும், இதனால் தண்ணீரைக் குடிக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோன்று மேச்சல் நிலம் கண்மாய் தண்ணீரில் தூசி படிவதாலும் கழிவு நீர் கலப்பதாலும் அந்தத் தண்ணீரைக் குடிக்கும் ஆடு மாடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்து வருகின்றனர்.

எனவே பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இயங்கி வரும் தனியார் கல்குவாரியை மூடக்கோரி பலமுறை மறியல் ஆர்ப்பாட்டம் செய்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே,  உடனடியாக கல்குவாரியை மூடக்கோரி அக்கிரமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top