மதுரையில் கனமழை குளம் போல மாறிய சாலைகளால் பொதுமக்கள் சிரமப்பட நேரிட்டது.
மதுரை நகரில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இவ்வாறு பெய்து வரும் மழையால், மதுரையில், அண்ணாநகர், யாகப்பா நகர், வண்டியூர், புதூர், பழங்காநத்தம், திருப்பாலை ,அய்யர் பங்களா, கருப்பாயூரணி, மற்றும் கே.கே .நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் பெய்த மழை நீரானது சாலையில் வழிந்து ஓட கால்வாய் வசதியில்லாததால் ஆங்காங்கே குளம் போல தேங்கியுள்ளது.
இதனால், இப்பகுதியில் சாலைகளில் செல்லும் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகனத்தில் பயணிப்போம் கடும் அவதி அடைந்துள்ளனர்.இது குறித்து, மதுரை மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும் கூட, சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், மதுரை மேலமடை, வீரவாஞ்சி தெரு, ஜூபிலி டவுன், கோமதிபுரம் ஆகிய பகுதிகளில் கழிவுநீர் கொப்பளித்து வெளியேறுகிறது. இதனால், கொசுத்தொல்லை அதிகரித்து , துர்நாற்றம் வீசுகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது..
மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் பல சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொண்டாலும், இன்னமும் பல
வாடுகளில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக் கிறது. ஆகவே , மதுரை மேயர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சாலை களை பார்வையிட்டு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டு மென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.