Close
நவம்பர் 22, 2024 2:05 காலை

புதுக்கோட்டை அருகே முறைகேடாக இயங்கி வரும் கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே முறைகேடாக இயங்கும் கல்குவாரியை மூட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சு நடத்தும் போலீஸார்

புதுக்கோட்டை அருகே முறைகேடாக இயங்கி வரும் கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வராண்டாவில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாவட்ட ஆட்சியரிடம் கிராமக்கள் அளித்த கோரிக்கை மனு:

திருமயம் தாலுகா, லெம்பலக்குடி கிராமத்தில்  தனி நபர் ஏலத்தில்  எடுத்து குவாரி தொழில் செய்து வருகிறார். இவர் இந்த குவாரியின்  அருகில் குடியிருப்புகள் இருந்து வருகின்றன.  இருப்பினும் குவாரியினை ஏலம் எடுத்தவர் முறைகேடான வகையில் கற்கள் வெட்டி எடுத்து விற்பனை செய்து வருகின்றார்.

மேற்கண்ட குவாரியில் எந்தவிதமான அரசு விதிமுறைகளும் பின்பற்றப்படவில்லை.  இந்த குவாரியினை அரசு அனுமதிக்கப்பட்ட அளவில் கற்களை வெட்டி எடுத்த விற்பனை செய்யவே குத்தகை உரிமம் எடுத்துள்ளார்.

ஆனால் இன்று வரை மேற்கண்ட இந்தக் குவாரியில் முறையற்ற முறையில் சக்தி வாய்ந்த வெடி மருந்துகளை பயன்படுத்தியே கற்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. மேற்கண்ட குவாரியினை குத்தகைக்கு எடுத்த  நபர் தனது அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தி அளவீட்டினைத் தாண்டி கற்களை வெட்டி எடுத்துள்ளார்.

தற்பொழுதும் இந்த நிலையே தொடர்வது வேதனைக்கு உள்ளாக்குகிறது. மேலும் இந்த குவாரிக்கு அருகிலேயே குடியிருப்புகள், குளங்கள் இருந்து வருகின்றன. இந்த குவாரியில் கற்களை வெட்டி எடுக்கு அனுமதிக்கப்பட்ட வெடி மருந்துகளை விட சக்தி வாய்ந்த வெடிகளை பயன்படுத்துவதால் பூமிக்கு அதிக அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடிய வெடிமருந்துகளை பயன்படுத்துகின்றனர்.

 வெடி மருந்துகளின் உபயத்தினால் அருகில் உள்ள வீடுகளில் விரிசல் விழுந்து உள்ளன.  இந்த நிலை நீடித்தால் வீடுகள் இடிந்து விழுந்து வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்படும். மேலும் சுற்றி உள்ள நீர் நிலைகள், காற்று மண்டலம் முதலியவை மாசு ஏற்பட்டு எங்களின் எதிர்கால சந்ததிகளுக்கு சுவாச பிரச்னை போன்ற உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக நாங்கள் அச்சம் கொள்கிறோம்.

எனவே மேற்கண்ட குவாரியில் சக்தி வாய்ந்த வெடி மருந்துகளை பயன்படுத்துவதை தடை செய்தும்,  மேற்கண்ட குவாரியில் கற்களை வெட்டி எடுக்க தடை செய்து சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

முறைகேடாக இயங்கும் கல்குவாரியை  மூடக்கோரி அந்தக்கிரமத்தைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து அங்கு வந்த தாசில்தார் மற்றும் காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top