அடிப்படை வசதி தரக்கோரி கிராம பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்
மதுரை மாவட்டம், மேலூர் தாலுகாவில் உள்ள கோட்டநத்தம் பட்டி உள்ள ஏழை காத்தம்மன் காலனியில் 100 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்
கடந்த 35 ஆண்டுகளாக அவர்களுக்கு குடிநீர் மற்றும் சாலை வசதி மின்சார வசதி உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் இதுவரை எதுவும் இல்லை. இதற்காக அவர்கள் மேலூர் தாலுகா மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோரிடம் பலமுறை கோரிக்கை மனுக்களை கொடுத்துள்ளனர். ஆனால் எவ்வித பலனும் இல்லை.
இந்த நிலையில் மேலூர் தாலுக்கா கோட்ட நத்தம்பட்டி ஏழை காத்தம்மன் காலனியில் வசிக்கும் பள்ளி மாணவ மாணவிகள் பள்ளிகளை புறக்கணித்து உட்பட்ட சுமார் 100க்கும் மேற்பட் டோர் அந்த கிராமச் சேர்ந்த பொதுமக்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் சந்தித்து தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி மனு அளித்தனர். இதனால் அப்பகுயில் பரபரப்பு நிலவியது.