Close
செப்டம்பர் 20, 2024 1:30 காலை

தனியார் மயம்.. ஈரோடு மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் தர்ணா

ஈரோடு

தற்காலிக தொழிலாளர்கள் ஈரோடு மாநகராட்சி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாநகராட்சியில் துப்புரவு பொது சுகாதாரம் மற்றும் பொறியியல் துறைகளில் தனியார் துறை புகுத்தப்படுவதைக் கண்டித்து பல ஆண்டுகளாக பணிபுரியும் தற்காலிக தொழிலாளர்கள் ஈரோடு மாநகராட்சி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு புதிதாக தனியார் நிறுவனங்களைக் கொண்டு இத்தகைய பணிகளில் ஆட்கள் நியமிக்க மாநகராட்சி நகராட்சிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது மாநகராட்சியில் 1500 தொழிலாளர்கள் தின கூலி அடிப்படை யில் பணிபுரிந்து வரும் அனைவரும் பாதிக்கப்படுவார்கள். ஆகவே தனியார் மயமாக்கும் அரசு ஆணையை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாநகராட்சி மேயர் அலுவலகத்திலும் முற்றுகையிட்டு தங்கள் கோரிக்கைகளை மேயர் துணை மேயர் மற்றும் ஆணையரிடம் கூறினர். தனியார் துறை அனுமதிக்கப்பட்டால்  தங்களது வாழ்வா தாரம் பாதிக்கும், சம்பளம் குறையும் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.

முன்பிருந்தது போலவே மாநகராட்சிக்கு கீழ் உள்ள சுய உதவி குழுக்கள் மூலம் தங்களது பணியை தொடர வேண்டும். தங்கள் பணி நிரந்தரப்படுத்த வேண்டும் அரசு வெளியிட்டுள் ள இப்பணிகளை தனியார் மையமாக்கும் அரசாணை ரத்து செய்ய வேண்டும் என்று  வலியுறுத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top