Close
நவம்பர் 22, 2024 8:35 காலை

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர்

கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களைப் பாதிக்கும் புதிய தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ திரும்பப்பெற வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் புதுக்கோட்டையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற தர்ணா-ஆர்ப்பாட்டத்திற்கு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத் தலைவர் சி.சோமசுந்தரம் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் த. ஜீவன்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் சே.பேச்சியம்மாள், பொதுக்குழு உறுப்பினர்கள் பழ.தேவேந்திரன், த.ரமேஷ் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் பேசினர்.

தோழமைச் சங்க நிர்வாகிகள் இரா.ரெங்கசாமி, மா.குமரேசன், அ.சந்திரபோஸ் ,து.சந்திரசேகரன், இராம.வள்ளியம்மை ஆகியோர் போராட்டத்தை ஆதரித்துப் பேசினர்.

தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ச.மயில் நிறைவுரையாற்றினார். முடிவில் மாவட்டப் பொருளாளர் வே. கீதா நன்றி கூறினார்.

19 ஆண்டுகளாக ஆசிரியர், அரசு ஊழியர்களின் வாழ்வாதா ரத்தைப் பாதித்துள்ள தன் பங்கேற்பே ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும்.  தமிழ்நாடு அரசு தனது தேர்தல் வாக்குறுதி யில் தெரிவித்துள்ளபடி, கிராமப்புற ஏழை, எளிய மாணவர்க ளின் கல்வியைப் பாதிக்கும் தேசிய புதிய கல்விக் கொள்கை ளையத் திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். 50 ஆண்டுகளாகப் பெற்று வந்த உயர் கல்விக்கான ஊக்க உயர்வை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்சக் கோரிக்கைகள்  வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேசிய கல்வி கொள்கை 2019 (NPE) இந்தியாவின் மக்களிடை யே கல்வியை மேம்படுத்துவதற்கான இந்திய அரசால் வடிவமைக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியாவில் உள்ள கல்லூரிகளுக்கு ஆரம்ப கல்வியை இந்தக் கொள்கை உள்ளடக்கியுள்ளது.

முதல் தேசிய கல்வி கொள்கை 1968 -ஆம் ஆண்டில் பிரதம மந்திரி இந்திரா காந்தி அரசாங்கமும் மற்றும் இரண்டாவது தேசிய கல்வி கொள்கை பிரதம மந்திரி ராஜீவ் காந்தியால் 1986 ல் வெளியிடப்பட்டது. 2019 -ஆம் ஆண்டு கி. கஸ்தூரிரங்கன் தலைமையில்  புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவை இந்திய அரசு தயாரித்து, கருத்து கேட்டு வருகிறது. ஜூலை 2019 -இல் இந்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கைத் திட்ட வரைவுக்கு,  தமிழ்நாட்டில் உள்ள பெரும்பா லான கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

1947 -ஆம் ஆண்டில் நாட்டின் சுதந்திரம் பெற்றதிலிருந்து, இந்திய அரசாங்கம் கிராமிய மற்றும் நகர்ப்புற இந்தியா பகுதிகளில் கல்வியறிவு பற்றிய பிரச்னைகளைத் தீர்க்க பல்வேறு திட்டங்களை உருவாக்கி நிதியுதவி செய்தது.

இந்தியாவின் முதல் கல்வி அமைச்சா் மவுலானா அபுல் கலாம் ஆசாத், நாடு முழுவதும் கல்வி முழுவதும் வலுவான ஒன்றிய அரசு கட்டுப்பாட்டின் கீழ், ஒரு சீரான கல்வி முறையுடன் கொண்டு வர திட்டமிட்டார்.

இந்தியாவின் கல்வி முறைமை நவீனமயமாக்க திட்டங்களை உருவாக்க மத்திய பல்கலைக்கழகம் கல்வி குழு  (1948-1949), இடை நிலை கல்வி குழு (1952-1953) மற்றும் கோதரி கல்வி குழு (1964-66) ஆகியவற்றை நிறுவியது. இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு அரசாங்கத்தால் அறிவியல் கொள்கை பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நேரு அரசாங்கம் உயா் தரமான அறிவியல் கல்வி நிறுவனங் களை நிறுவ உதவியது. அதாவது,  அவைகள் இந்திய தொழில் நுட்ப நிறுவனங்கள் எனப்பட்டது. 1961 -ஆம் ஆண்டில், ஒன்றிய அரசு, தேசிய கல்வி கழகம் மற்றும் கல்வி கழகம் (NCERT) ஒரு தன்னாட்சி  அமைப்பாக அமைந்தது. இது கல்வி மற்றும் கொள்கைக் கொள்கைகளை உருவாக்கி நடைமுறைப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு ஆலோசனை வழங்கியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top