Close
நவம்பர் 21, 2024 11:38 மணி

புதுகை சமத்துவபுரம் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் தெரு நாய்கள்..

புதுக்கோட்டை

புதுக்கோட்டை சமத்துவபுரம் பகுதியில் மக்களை அச்சுறுத்தி வரும் தெருநாய்ககள்

புதுக்கோட்டை சமத்துவபுரம் செல்லும் பகுதியில்  தெரு நாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உடனடி  நடவடிக்கை எடுக்க  வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

புதுக்கோட்டை சமத்துவபுரம் செல்லும் பகுதியில்   ஏராளமான வீடுகள் இருக்கின்றன  இவ்வழியாக புதுக்கோட்டை உள்ளிட்ட நகருக்குள் செல்லும் சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில்  ஆங்காங்கே தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.

சில நேரங்களில் தெருவில் வருவோரை கடிப்பதும், விரட்டு வதும் வாடிக்கையாகி விட்டது.தெருக்களில் கிடைக்கும் உணவுக்காக சண்டையிடும் தெருநாய்கள் சாலைகளில் செல்வோரை மிரள வைப்பதுடன் வேகமாக வந்து இரு சக்கர வாகனங்களில் மோதி அதில் வருவோரை கீழே தள்ளிவிடுவதும் தொடர் கதையாக நடக்கிறது.

நடந்து செல்பவர்களையும் இருசக்கரவாகனங்களில் செல்பவர்களையும் விரட்டிச்சென்று கடிக்க வருகின்றன. இதனால் விபத்துகள் ஏற்படுகின்றது.   இதில் சில இடங்களில் பொதுமக்கள் சிலரை நாய்கள்  கடித்துள்ளன.  தெருவில் நாய்கள் கூட்டமாக சுற்றித்திரிவதை கண்டாலே பயமாக உள்ளது.

நாய்கள் தொல்லையால் குழந்தைகளை வீட்டை விட்டு வெளியில் அழைத்து செல்வதிலும், வெளியில் விளையாட அனுப்புவதிலும் மக்கள்  சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் குழந்தைகளை கடிக்க பாய்கிறது.  தெருவில் புது ஆட்கள் யாரும் வந்தால் விரட்டி கடிக்கிறது.

தெருவில் நிறுத்தப்பட்டிருக்கும் கார்களின் அடிப்பகுதியில் நாய்கள் தங்கி விடுகின்றன. அதில் குட்டிகளை போட்டு வளர்க்கிறது. இரவு நேரங்களில் நாய்கள் குரைக்கும் சப்தத்தால்  அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தூக்கம் கெட்டுப்போகிறது.

.நாய்கள் தொல்லையை போக்க  முன்பெல்லாம் நகராட்சி நிர்வாகம்  சுற்றி திரியும் தெரு நாய்களைப்பிடித்து  அவற்றுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதுண்டு. தற்போது அந்நடவடிக்கைகள் நின்று போயுள்ளன, எனவே மீண்டும் கவனம் செலுத்தி   நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top