Close
செப்டம்பர் 20, 2024 5:46 காலை

சோழவந்தானில் ஆக்கிரமிப்புகளால் சுமார் 100 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பாதிக்கும் அபாயம்

மதுரை

சோழவந்தானில் பாசனக்கால்வாய் சீரமைக்கக் கோரிக்கை

சோழவந்தானில் ஆக்கிரமிப்புகளால் சுமார் 100 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் வாடிப்பட்டி சாலை, ஆண்டியப்பமேடு செல்லும் பாதையில் இருந்து கிளை கால்வாயாக உருவாகும் குட்டதட்டி மடையில் இருந்து உருவாகும் கால்வாய் சுமார் 6 அடி அகலம் உள்ளது.

இந்த கால்வாயானது தற்போது, முற்றிலுமாக மணல் தேங்கி காணப்படுவதால், சுமார் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி  கிடைக்காமல் தரிசு நிலங்களாக மாறும் அபாயம்  ஏற்பட்டுள்ளது.

மேலும் ,இதன் மூலம் விவசாயத்தை நம்பி உள்ள சுமார் 200 விவசாய குடும்பங்கள் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, இந்த கால்வாயை தூர்வாரி தர வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், ஆக்கிரமிப்பில் உள்ள கால்வாய்களை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கேட்டுக் கொண்டனர்.
இதுகுறித்து, கிராம காவல் தனம் என்பவர் கூறும் போது:இந்த குட்ட தட்டி கால்வாயானது இரண்டு மாடுகள் சென்று வரக்கூடிய அகலமான கால்வாயாக இருந்தது தற்போது ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி இரண்டடிக்கும் குறைவாக சுருங்கி விட்டது .

ஆகையால், மாவட்ட நிர்வாகமும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் நேரில் பார்வையிட்டு ஆத்திரரிப்புகளை அகற்றி கால்வாயை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்
மேலும் இதன் மூலம் முல்லை பாசன கால்வாயில் இருந்து வரும் விவசாய நீர் தேனூர் கால்வாய் வரை சென்று சேர்கிறது.

இந்த கால்வாய் மூலம், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது . இதனை நம்பி சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றன. ஆகையால் ,காலம் தாழ்த்தாமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு கால்வாயை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  வலியுறுத்தியுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top