மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மாநகராட்சி 70 வது வார்டு, வானமாமலை நகர் முதல் தெருவில் பாதாள சாக்கடை மூடி உடைந்து கழிவு நீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால், கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கோயில் இருக்கும் இந்த சாலைப் பகுதியில் இந்த நீர் தேங்கி நிற்பதால் பக்தர்கள் முகம் சுழித்தபடி அப்பகுதியை கடந்து செல்கின்றனர். பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, உடனடியாக அதிகாரிகள் பாதாள சாக்கடை உடைப்பை சரி செய்து சாலையில் கழிவு நீர் தேங்க்காமல் நோய் தொற்றிலிருந்து காக்க வேண்டும். துர்நாற்றம் தாங்க முடியாததால் நோய் தொற்றில் சிக்கும் அபாயத்தை தவிர்க்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.