Close
செப்டம்பர் 20, 2024 1:44 காலை

மரவள்ளி கிழங்கு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க முன்வரவேண்டுமென கொமதேக வலியுறுத்தல்

நாமக்கல்

கொமதேக பொதுச்செயலர் ஈ.ஆர். ஈஸ்வரன் எம்எல்ஏ

மரவள்ளி கிழங்கு மற்றும் அனைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காத்திட தமிழக அரசு முன்வர வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக  அக்கட்சியின் பொதுச்செயலரும், திருச்செங்கோடு சட்டப்பேரவை தொகுதி உறுப்பினருமான ஈ.ஆர். ஈஸ்வரன் வெளியிட்ட அறிக்கை:

சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் மரவள்ளி கிழங்கு விவசாயிகள் மற்றும் லாரி உரிமையாளர் அதிகமாக உள்ளார்கள். இந்த நிலையில் அறுவடை செய்த மரவள்ளிக் கிழங்கை ஏற்றிக்கொண்டு வரும் லாரிகளுக்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் 10 டன்னுக்கு மேல் எடை இருந்தால் ஒரு லாரிக்கு ஒரு நடைக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிப்பதாக பாதிக்கப்படும் விவசாயிகளிடம் இருந்து தகவல் வருகிறது.

மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள் செம்பேன் மற்றும் மாவு பூச்சி தாக்குதலில் இருந்து மீள முடியாமல் பல துன்பங்களை அனுபவித்து கொண்டிருக்கும் இந்த நிலையில், ஒரு சாதாரண விவசாயி உற்பத்தி செய்த மரவள்ளி கிழங்கை 10 டன் எடைக்கு மேல் ஏற்றி சென்றால் லாரி உரிமையாளர்களிடம் சுமார் 40 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுவதாக வும் அவ்வாறு விதிக்கப்படும் அபராதத்தை லாரி உரிமையாளர் விவசாயிடமிருந்து பணம் வசூலித்து அபராதம் கட்டுவதாகவும் இதனால் விவசாயிகள் சொல்ல இயலாத துயரத்துக்கு ஆளாகி வருவதாகவும் பல்வேறு தகவல்கள் வருகிறது.

மேலும் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் மதிப்பு கூட்டப்படாத நேரடி உற்பத்தி பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை யை கைவிட வேண்டும்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை தமிழக அரசு மிகவும் துல்லியமான முறையில் கையாண்டு வருவதை உறுதிப்படுத்தும் வகையில், மரவள்ளி கிழங்கு விவசாயிகளுக்கும் மற்றும் இதர நேரடி விவசாய உற்பத்தி பொருட்களை கொண்டு செல்லும் லாரி உரிமையாளர்க ளுக்கு தமிழக அரசு அபராதம் விதிப்பதில் இருந்து விதிவிலக்கு அளித்து விவசாயிகள் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும் என அதில் ஈ.ஆர். ஈஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top