Close
செப்டம்பர் 20, 2024 1:42 காலை

மதுரை அருகே நிரம்பிய கண்மாய்… கலிங்கி வாய்க்கால் அடைப்பால் சாலையில் ஓடும் நீரில் மீன்பிடிக்கும் மக்கள்..

மதுரை

மதுரை எல்லிஸ் நகர் சாலை ,முத்து நகர் பகுதியில்  சாலையில் சூழ்ந்துள்ளது. இதனால், சாலையில் துள்ளும் மீன்களை பிடிக்கும் மக்கள்

மறுகால் பாய்ந்து வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் வழிந்தோடும் கண்மாய் நீர் துள்ளிப் துள்ளி குதிக்கும் மீன்களை அப்பகுதி மக்கள்  பிடித்துச்சென்றனர்.

வடகிழக்கு பருவமழையான தமிழகம் முழுவதும் அதிதீவிரமாக பெய்து வருகிறது. இதனால், அனைத்து கண்மாய்களும்  வேகமாக  நிரம்பி  வருகின்றன.

இந் நிலையில் மதுரை மாடக்குளம் கண்மாய் முழு கொள்ளளவை எட்டி  கலிங்கி வழியாக உபரி நீரி வெளியேறி வருகிறது. இதனால், கோர வாய்க்காலில்  கண்மாய் உபரி நீர் பாய்ந்து செல்கிறது. இதில், பல இடங்களில் சரிவர தூர்வாராததால்,  சாலையில் நீரானது வழிந்து ஓடுகிறது. இதன் ஒரு பகுதியாக, மதுரை எல்லிஸ் நகர் சாலை ,முத்து நகர் பகுதியில்  பாயும் நீரானது சாலை முழுவதும் சூழ்ந்துள்ளது.
இதனால், சாலையில் மீன்கள் துள்ளி குதித்து விளையாடுகிறது.  இதனை , அப்பகுதி மக்கள்  வலை  போட்டு அரித்து மீன்களை அள்ளி செல்கின்றனர்.

வடகிழக்கு பருவமழை தொடங்கிய காலத்திற்கு முன்பே பலமுறை மாநகராட்சி அதிகாரிகளுடன் தகவல் தெரிவித்தும் வாய்க்கால் பகுதிகளை தூர்வார எத்தனையோ முறை சொல்லியும் தூர்வாராத காரணத்தினால் தற்பொழுது, சாலையில் நீர் வழிந்து ஓடுவதால்   சாலைகள் சேதம் அடைவது மட்டுமல்லாது வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படும் நிலை ஏற்படுகிறது.

மேலும்,அப்பகுதி குடியிருப்பு வாசிகளும் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.  வடகிழக்கு பருவ மழையானது தொடரும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,  காலம் தாழ்த்தாமல்  மாநகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து அடைப்பு ஏற்பட்டுள்ள வாய்க்கால்களை தூர்வாரி சாலையில் நீர் செல்லாத அளவிற்கு தேங்காத வகையில் செய்ய வேண்டும் என்பதே  பொதுமக்களில் எதிர்பார்ப்பாக உள்ளது.  மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்குமா பொறுத்திருந்து பார்க்க வேண்டுமென அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top