Close
செப்டம்பர் 20, 2024 5:28 காலை

கல்குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடத்திய கிராம மக்கள்

புதுக்கோட்டை

திருமயம் அருகே தனியார் குவாரிய மூடக்கோரி முதல்வருக்கு தபால் நிலையத்தில் மனு அனுப்பிய கிராம மக்கள்

புதுக்கோட்டை அருகே மெய்யபுரம் கிராமத்தில் பொதுமக்க ளுக்கு அச்சுறுத்தலாக இயங்கி வரும் தனியார் கல்குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி அக்கிரமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா உட்பட்ட காட்டுபாவா பள்ளிவாசல் ஊராட்சியில் உள்ள மெய்யபுரம் கிராமத்தில் தனியார் கல்காரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்குவாரியின் அருகே 150கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் ஆலயங்கள் பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன.

இதில் விதிமுறைகளை மீறி இந்த கல்குவாரியில் அதிக மருந்து கொண்டு வெடிகளை வைத்து பாறைகளை வெட்டி எடுப்பதும் தொடர்ந்து இரவு பகல் பாராமல் வெடி வைப்ப தாலும் இதனால் அருகே வீடுகள் ஆலயங்கள் பள்ளிக் கூடங்கள் என அதிர்வுகள் ஏற்பட்டு விரிசல்கள் ஏற்படுகிறது.

வெடி வெடிப்பதில் அந்த மருந்துகளின் புகைகள் ஊருக்குள் காற்றோடு கலப்பதினால் மாசு ஏற்படுவதாகவும் அதை சுவாசிக்கிற பொதுமக்கள் குழந்தைகள் பெரியவர்கள் என அனைவருக்கும் பல்வேறு வியாதிகள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 மேலும் அருகே உள்ள குளத்தில் மாசு கலந்து தண்ணீரை ஆடு மாடுகள் குடிப்பதால் கால்நடைகளும் இறந்து போவதாகவும் இதுபோன்று பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இயங்கி வரும் இந்த கல் குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி பலமுறை பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் இதனால் வரை மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள அந்த கல்குவாரியை இழுத்து மூடுவதற்கு தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட் டோர் புதுக்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் 250-க்கும் மேற்பட்ட தபால்களை முதல்வருக்கு தபால் அனுப்பும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top