Close
நவம்பர் 22, 2024 7:45 காலை

பணி நிரந்தரம் செய்ய மாற்றுத்திறன் மாணவர்களுக்களுக்கான சிறப்பு ஆசிரியர்கள் கோரிக்கை

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு ஆசிரியர்கள்

பணி நிரந்தரம் செய்ய மாற்றுத்திறன் மாணவர்களுக்களுக்கான சிறப்பு ஆசிரியர்கள் கோரிக்கை

இது குறித்து அச்சங்கத்தின் செயலர் மற்றும் பொருளாளர் ஆகியோர் புதுக்கோட்டை மாவட்ட  ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனுவில்,
தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்லி மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான உள்ளடங்கிய கல்விதிட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்  1-ஆம் வகுப்பு 8 – ஆம் வகுப்பு வரை படிக்கின்ற 1.30  (ஒரு லட்சத்து முப்பது ஆயிரம்) லட்சம் மாற்றத்திறன் கொண்ட மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்களாக கடந்த 20 ஆண்டுகளாக எந்த அடிப்படை சலுகையும் இல்லாமல் பணி செய்து வருகின்றோம்.

இது தொடர்பாக பலமுறை கல்வி துறை அமைச்சருக்கும் கல்வி அதிகாரிகளுக்கும் பலமுறை நேரில் சந்தித்தும் கோரிக்கை மனு அளித்தும் இதுவரைக்கும் எந்தச் சலுகையும் வழங்கப்படவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக ஊதிய உயர்வும் உயர்த்தப்படவில்லை
.
எனவே தமிழக முதல்வர், மாணவர்களின் நிலை கருதியும், சிறப்பு பயிற்றுநர்களின் வாழ்வாதாரத்தை காத்திடவும், பணி நிரந்தரப்படுத்தி, போதுமான ஊதிய உயர்வு ரூ. 30 ஆயிரம் வழங்கியும் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறன் மாணவர்களின் கல்வியையும், நலனையும் பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க  வேண்டுமென மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பில் வலியுறுத்துவதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top