Close
நவம்பர் 22, 2024 6:56 காலை

விஸ்வரூபம் எடுத்த கீரணிப்பட்டி கண்மாய் விவகாரம்… கிராம மக்களுக்கு ஆதரவாக களமிரங்கிய பாஜகவினர்…

புதுக்கோட்டை

திருமயம் அருகே கீரணிப்பட்டி கண்மாய் ஆக்கிரமிப்பு தொடர்பாக நடைபெற்ற சாலை மறியலில் பொதுமக்களுக்கு ஆதரவாக களமிரங்கிய பாஜக நிர்வாகிகள்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், கீரணிப்பட்டி கண்மாய் விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து கிராம மக்களுக்கு ஆதரவாக பாஜவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சுமார் 120 ஏக்கர் பரப்பளவில் கொண்ட விவசாய நிலங்களைக்
கொண்ட கீரணிப்பட்டி கண்மாய் இந்த விவசாயத்தை நம்பி 1500-க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர், கண்மாய் அருகேதனியார் ஒருவர் பட்டா வழங்கப்பட்டுள்ள தால் அதனை மீட்டு பயன்பாட்டிற்கு வர முயன்ற நிலையில் இதனை ஆட்சேபனைசெய்து கடந்த சிலவாரங்களுக்கு புதுக்கோட்டையில் மக்கள் குறைதீர் முகாமில் கீரணிப்பட்டி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர்  கவிதாராமு, இப்பிரச்னைக்கு தீர்வு காண வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று (செவ்வாய்தக்கிழமை)  கண்மாய் அமைந்துள்ள பகுதியில் வருவாய்த்துறையினர் முகாமிட்டு ஆய்வு செய்த நிலையில் பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்து தங்களது ஆட்சேபத்தை  தெரிவித்தனர்.

தகவலறிந்த ஒன்றிய பாஜக தலைவர் கணேசன், கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் செல்வம் அழகப்பன், மாவட்ட செயலாளர் சுமதி ரவிச்சந்திரன், ஒன்றிய பொதுசெயலாளர் குமார் ஆகியோர் அங்கு சென்று பொதுமக்களின்கோரிக்கை தொடர்பாக வருவாய்த் துறையினரிடம் பேசியும் பலனளிக்க வில்லை.

இதைத் தொடர்ந்து அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக கீரணிப்பட்டியில் கிராம மக்களுக்கு ஆதரவாக  கிழக்கு மாவட்டத்தலைவர் செல்வம் அழகப்பன் தலைமையில் சாலைமறியல் போராட்டத்தில் பங்கேற்றனர்.பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top