பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் குடும்ப வன்முறைகள், பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டுமென இந்திய மாதர் தேசிய சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்ட குழு கூட்டம் தஞ்சாவூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாதர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.தனசீலி தலைமை வகித்தார்.
இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநிலத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.பத்மாவதி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்முறைகளும், பாதுகாப்பற்ற தன்மை குறித்தும்,அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் பேசினார்.
கூட்டத்தில் பெண்கள்,சிறுமிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்று வருகிறது. பெண்கள் பாதுகாப்பற்ற நிலையிலேயே உள்ளனர்.
மேலும் குடும்ப வன்முறைகளும் பெண்கள் மீது அதிகரித்து வருகிறது, விஞ்ஞானமும், சட்டங்களும் வளர்ந்துள்ள நிலையில் பெண்களை, சிறுமிகளை பாதுகாக்க வன்கொடுமை சட்டத்தை கடுமையாக்கி தமிழ்நாடு முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தை அனைத்து நகரங்களுக்கும் விரிவு படுத்த வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் முன்பிருந்த வேலை நேரத்தை அமல்படுத்த வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக அதிகரிக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூபாய் 700 சம்பளம் வழங்க வேண்டும்.
தஞ்சை மாவட்டத்தில் கிராமங்கள், நகரங்கள், மாநகரங் களில் அனைத்து தெருக்களிலும் தெரு நாய்கள் அதிகமாக உள்ளன. மக்கள், சிறுவர் சிறுமியர் நடமாடுவதற்கு அச்சுறுத்தலாக உள்ளது.
மாவட்ட ஆட்சியர் உரிய கவனம் செலுத்தி து தெரு நாய்களுக்கு தடுப்பூசி உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நகர்புறங்களில் உள்ள தெருக்களில் துப்புரவு பணியாளர்கள் போதிய அளவில் இல்லாததால் குப்பைகள் தேங்கி, கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி, வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுகள் பரவி வருவதால், சுகாதார பணியாளர்கள் போதிய அளவு நியமனம் செய்து சுகாதாரதத்தை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தஞ்சை மாநகரின் மாதாக்கோட்டை ரோடு, புதுக்கோட்டை ரோடு , நீலகிரி ஊராட்சி உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் குப்பைகளை ஆங்காங்கே போட்டு கொளுத்துவதால் புகை பரவி மூச்சு திணறல் ஏற்படுவதை தடுத்திட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.