Close
செப்டம்பர் 20, 2024 1:32 காலை

கட்டுமான பெண் தொழிலாளர்களுக்கு ஓய்வு பெறும் வயதை 50 ஆக குறைத்து ஓய்வூதியம் வழங்க வேண்டும்

தஞ்சாவூர்

தஞ்சையில் அரசு அலுவலரிடம் மனு அளித்த ஏஐடியுசி கட்டுமானத் தொழிலாளர்கள்

கட்டுமான பெண் தொழிலாளர்களுக்கு ஓய்வு பெறும் வயதை 50 ஆக குறைத்து ஓய்வூதியம் வழங்க வேண்டுமென சர்வதேச மகளிர் தினத்தில் ஏ ஐ டி யூ சி கட்டுமான சங்கம் தமிழ்நாடு முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு ஏஐடியுசி கட்டுமான தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் பெறும் வயது 60 ஆக உள்ளது.பெண் தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய வயதை ஐம்பதாக குறைத்து ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் தமிழ்நாடு முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பும் இயக்கம்  தஞ்சை மாவட்டத்தில் 22 இடங்களில் நடைபெற்றது.

முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு இ எஸ் ஐ மருத்துவ திட்டத்தை அமல்படுத்தி, விபத்து கால மருத்துவ வசதி உள்ளிட்டவைகள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும், விபத்து மரணம், இயற்கை மரணம், கல்வி நிதி, திருமண உதவி உள்ளிட்ட உதவி தொகைகளை உயர்த்தி வழங்க வேண்டும்.

ஓய்வூதியம் விண்ணப்பித்த நாளிலிருந்து ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருவதை உயர்த்தி, ஓய்வூதியம் ரூபாய் 6000 ஆக வழங்க வேண்டும். ஓய்வூதியர்கள் இயற்கை மரணம் அடைந்தால் இயற்கை மரண ஈமச்சடங்கு உதவித் தொகை வழங்க வேண்டும். கட்டுமான பெண் தொழிலாளர் களுக்கு ஆறு மாத காலம் பேறு கால விடுப்பு ஊதியம் வழங்க வேண்டும்.

வீட்டு வசதி திட்டத்தில் விண்ணப்பித்த தொழிலாளர்களுக்கு பல்வேறு காரணங்களை கூறி மனுவை திருப்பி அனுப்பாமல், விண்ணப்பத்தை ஏற்று நலத்தொகைகளை அமல்படுத்த வேண்டும். அனைத்து வேலைகளிலும் உள்ளூர் தொழிலாளர் களுக்கு 90% வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.

தற்போது பிடித்தம் செய்யப்படும் ஒரு சதவீத நல நிதியை ஐந்து சதவீதமாக உயர்த்தி வசூல் செய்ய வேண்டும். ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்து மரணம் உள்ளிட்ட கேட்பு மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் கிராம நிர்வாக அலுவலரிடம் கோரிக்கை விண்ணப்பம் அளிக்கப்பட்ட நிகழ்விற்கு சங்கத்தின் துணைத் தலைவர்கள் பி.செல்வம், எம். சிகப்பியம்மாள் தலைமை வகித்தனர். எஐடியூசி மாவட்ட தலைவர் வெ.சேவையா, மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன், உடல் உழைப்பு சங்க மாவட்ட பொருளாளர் பி.சுதா, நிர்வாகி கே.கல்யாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கும்பகோணம் கிராம நிர்வாக அலுவலரிடம் அளிக்கப்பட்ட மனுவிற்கு மாவட்ட பொதுச் செயலாளர் ஆர். தில்லைவனம் தலைமை வகித்தார் . நிர்வாகிகள் க.சுந்தரராஜ், க.சரவணன் சி.தண்டபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதேபோல பாபநாசம் சீனி சுகுமாரன், வங்காரம்பேட்டை. உ.சௌந்தரராஜன், கபிஸ்தலம்  து. ராமஜெயம், திருக்கருகாவூர் எஸ்.ராஜேந்திரன், திருப்பாலத்துறை ஜெ.பாலசுப்பிரமணியன், ராஜகிரி எஸ்.கலியமூர்த்தி, திருப்பனந்தாள் கி.ராஜ்மோகன், திருவையாறு எஸ்.பரிமளா, தொண்டராம்பட்டு ஆர்.சேகர்.

சக்கரக்கோட்டை கோ.ஆசைத்தம்பி,  ஒரத்தநாடு தி.திருநாவுக்கரசு, பாப்பாநாடு மு.ராமையன்,. சோழகன்கரை ம.ஜமுனாராணி, தெற்குகோட்டை செல்வராஜ் ,சங்கரநாதர் குடிகாடு த.குமார் , வடக்கு கோட்டை சரவணன்,திருநல்லூர் எஸ்.ரங்கசாமி, பின்னையூர் எம்.அன்பு , பேராவூரணி ஆர்.மூர்த்தி, அம்மாபேட்டை கே.ராஜாராம் ஆகியோர் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்களிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சங்க நிர்வாகிகள் அன்பழகன்,புகழேந்தி, மணிகண்டன் , பாஸ்கர், சாமிநாதன்,வீரமணி, கார்த்திக், வேணுகோபால்,. முகமது இப்ராஹிம் கனி, தெய்வசிகாமணி, ஜெகதீசன், வாஞ்சிநாதன் , எலிசபெத், மணியம்மை,. செந்தில், பாலகிருஷ்ணன், ரவிச்சந்திரன், தனலட்சுமி,. செல்வராஜ், அண்ணாதுரை, திருமேனி,. சூரியமூர்த்தி, முருகேசன்,. நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top