Close
செப்டம்பர் 20, 2024 3:52 காலை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோபியில் கிராம நிருவாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு

கோபியில் ஆர்ப்பாட்டத்தால் ஈடுபட்ட தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர் சங்கத்தினர்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோபி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக  தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநில மையம் அறிவித்துள்ளபடி, புதிய பென்ஷன்(CPS) திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு சரண்டரை மீண்டும் வழங்க வேண்டும்.பட்டப் படிப்பு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

கூடுதல் பொறுப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி கோபி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கோபிசெட்டிபாளையம் வட்டக் கிளையின் தலைவர் ஜெயந்தன் தலைமையில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

வட்ட செயலாளர் சரவணக்குமார், வட்ட பொருளாளர் சுஜேஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்ட துணை தலைவர் நடராஜு,வட்ட துணை செயலாளர் பாருக் பாட்சா,வட்ட ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் உள்பட கோபி வட்டத்தில் பணிபுரியும் 56 கிராம நிர்வாக அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top