Close
செப்டம்பர் 20, 2024 3:42 காலை

சட்டப்பேரவையில் இன்று (மார்ச்29) போக்குவரத்து மானிய கோரிக்கை: ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

தஞ்சையில் நடைபெற்ற ஏஐடியூசி போக்குவரத்து ஓய்வூதியர்கள் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

சட்டமன்றத்தில்( மார்ச் 29) புதன்கிழமை நடைபெறும் போக்குவரத்து மானிய கோரிக்கையில் போக்குவரத்து ஓய்வூதியர்களின் அகவிலைப்படி , அரசு பொறுப்பேற்று ஓய்வூதிய வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளில் தீர்வு காணப்பட வேண்டுமென  தமிழ்நாடு முதல்வரை வலியுறுத்தி ஏஐடியூசி போக்குவரத்து ஓய்வூதியர்கள் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் தஞ்சையில்  நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் ஏஐடியூசி சம்மேளனத்தின் அறிவிப்பின்படி, அரசு பொறுப்பேற்று ஓய்வூதிய வழங்கவும், அகவிலைப்படி வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்திட வேண்டும் என்பன  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும், அனைத்து மண்டல அலுவலகங்களின் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூரில் ஜெபமாலைபுரம் போக்குவரத்து நகர் கிளை முன்பு  நடைபெற்ற மாநிலந்தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் பி.அப்பாத்துரை தலைமை வகித்தார்.சங்கத் தலைவர் மல்லி.ஜி.தியாகராஜன் முன்னிலை வகித்தார்.

கோரிக்கைகளை விளக்கி ஏஐடியூசி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி. சந்திரகுமார், மாநிலச் செயலாளர் ஆர்.தில்லைவனம், மாவட்ட தலைவர் வெ.சேவையா, வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் க.அன்பழகன்,அரசு போக்குவரத்து ஓய்வூதியர் சம்மேளனத்தின் துணைத் தலைவர் துரை.மதிவாணன்.

கௌரவத் தலைவர்  ஜெ.சந்திரமோகன்,  ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகிகள் கே.சுந்தரபாண்டியன், எம்.வெங்கடபிரசாத், அ.சுப்பிரமணி யன், அரசு போக்குவரத்து சங்க தலைவர்கள் என். சேகர், எஸ்.தாமரைச்செல்வன் சி.ராஜமன்னன் ஆகியோர் உரையாற்றினார்கள்.முடிவில் பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியம் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் அரசு ஓய்வூதியர்கள் மற்றும் பொதுத் துறை ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயரும் போதெல்லாம் ஓய்வூதியத்துடன் இணைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து பென்சன் விதியில் அகவிலைப்படி உயர்வு சட்ட உரிமை என குறிப்பிடப்பட்டும், கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் உயர்ந்துவிட்ட பழைய, புதிய அகவிலைப்படி உயர்வுகள் இன்று வரை வழங்கப்படவில்லை.

இது குறித்த உயர்நீதிமன்ற வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசும், கழக நிர்வாகிகளும் அகவிலைப்படி உயர்வு வழங்க மறுக்கிறது. உடனடியாக நீதிமன்ற தீர்ப்பின் படி அகவிலைப்படி உயர்வு வழங்கிடவும், பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி ஓய்வு பெற்ற தொழிலாளர் களுக்கு அரசு பொறுப்பேற்று ஓய்வூதியம் வழங்கிடவும், 1.4.2003 -க்கு பிறகு பணியில் சேர்ந்த தொழிலாளர்களையும் நடைமுறையில் உள்ள ஓய்வூதியத்துடன் இணைத்திடவும்,

கடந்த 2021 ஏப்ரல் மாதம் முதல் ஓய்வுபெற்ற, இறந்து போன பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை உள்ளிட்ட பணப்பலன்களை வழங்கிட வும் ,2016 ஆம் ஆண்டு வாரிசு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு ஆறு வருடங்களுக்கு மேலாக காத்திருக்கும் வாரிசுகளுக்கு வாரிசு பணி வழங்கிடவும்,

சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாரிசு பணிக்கு பதிந்து காத்திருப்பவர்களுக்கு ஆண்டு தோறும் வாரிசு பணி வழங்குவதை உறுதி செய்யவும், போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுனர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர் காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் உடனே நிரப்பிடவும்,

நிறுத்தப்பட்ட அனைத்து பேருந்துகளையும் இயக்கிடவும் , பேருந்து பணிமனைகள், பேருந்துகள் இயக்கம் உள்ளிட்டு தனியாருக்கு விடும் தனியார்மய நடவடிக்கைகளை கைவிட வும், தேர்தல் கால வாக்குறுதி அடிப்படையில் பழைய ஓய்வூதி ய திட்டத்தை நடைமுறைப்படுத்தவும்,

ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை அறிவித்தி டவும் உள்ளிட்ட தீர்வு காணப்படாத நீண்ட கால கோரிக்கை களில் முதல்வர் தலையிட்டு மார்ச் 29 நடைபெறும் சட்டமன்ற மானிய கோரிக்கையில் தீர்வினை அறிவிக்க வேண்டுமென வும்   ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top