Close
நவம்பர் 22, 2024 7:42 காலை

புதுக்கோட்டை நகரில் தெரு நாய்கள் தொல்லை: தடுக்க நகராட்சி மன்ற திமுக உறுப்பினர் கோரிக்கை

புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகரில் நாய்த்தொல்லை: திமுக நகர் மன்ற உறுப்பினர் கோரிக்கை

புதுக்கோட்டை நகரப் பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடிப்பதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் திமுக நகர் மன்ற உறுப்பினர் செந்தாமரை பாலு நகர் மன்ற கூட்டத்தில் வலியுறுத்தினார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகராட்சியில் நகர் மன்ற உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட 9 -ஆவது வார்டு திமுக நகர்மன்ற உறுப்பினர் செந்தாமரை பாலு  பேசியதாவது: புதுக்கோட்டை நகராட்சிக்குள்பட்ட எனது 9 -ஆவது வார்டு மடடுமல்லாது 42 வார்டுகள் உள்பட  பல்வேறு இடங்களில் சாலைகளில்  தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன.

மேலும் சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் பொழுது குறுக்கே நாய்கள் செல்வதால் ஏற்படும்  விபத்துகளில் சிக்கும்  பலரும்  கை, கால் முறிவு உள்ளிட்ட பலவிதமான காயங்களால்  அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல் சாலையில் நடந்து செல்பவர்களை துரத்திச் சென்று  நாய்கள் கடிப்பதால் தினம்தோறும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாய் கடிக்கு ஊசி போடுவதற் காக பலரும் மருத்துவமனைக்கு வந்து செல்லும் சூழ்நிலை அதிகரித்து  வருகிறது

இதனை தடுப்பதற்கு நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு முட்டுக்கட்டை போடும் விதத்தில் ப்ளூ கிராஸ் அமைப்பினர் பல்வேறு இடையூறுகள் செய்து வருகின்றனர். இதனால். நகராட்சி சார்பில் நாய்களை பிடிப்பதற்கு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது.

புதுக்கோட்டை நகரப் பகுதிகளில் அதிகளவில் வெறி நாய்கள் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக  இருந்து வரும் நாய்களை பிடிப்பதற்கு நகராட்சி ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்..

மேலும் ப்ளூ கிராஸ் அமைப்பிடம் சிறப்பு அனுமதி பெற்று அல்லது வேறு ஏதேனும் மாற்று ஏற்பாடுகள் செய்து பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரியும் நாய்களை பிடிப்பதற்கு  போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top