மதுரையை தொழில் நகரமாக்க முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த வலியுறுத்த வேண்டும் பாஜக வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளர் இராம ஸ்ரீனிவாசன், மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
வரலாற்று சிறப்பு மிக்க பழமையான நகரமாக மதுரை உள்ளது. மதுரைக்கென்று பல தனிச்சிறப்புகள் உள்ளது .அதில் தூங்கா நகரம், கோயில் நகரம், நான் மாடக்கூடல், கூடல் மாநகரம் என்றும் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.
அந்த வரிசையில், மதுரை ஒரு தொழில் நகரமாகவும் அழைக்கபட வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்து கிறோம்.
மதுரையில், மிகப்பெரிய தொழில்சாலைகளோ, மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் என்று சொல்லும்படியாக எந்த ஒரு பெரிய நிறுவனங்களும் அமையவில்லை. இதனால், மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் வசிக்கும் இளைஞர்கள் பலர் வேலைதேடி சென்னை, திருப்பூர், கோயம்புத்தூர் போன்ற தொழில் நகரங்களை நோக்கி அதிகமாக செல்கின்றனர்.
இன்னும் ஒரு சில ஆண்டுகளில், மதுரை உள்கட்ட மைப்பு அமையபெற்ற நகரமாக உள்ளது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி மதுரையை ஒரு தொழில் நகரமாக மாற்றும் வண்ணம் மிகப்பெரிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதலீட்டாளர்கள் மாநாடு மதுரையில் நடந்த மாநில அரசை வலியுறுத்த வேண்டும்.
தற்பொழுது, தமிழக அரசால் மாட்டுத்தாவணியில் அமைய இருக்கும் டைட்டல் பார்க் இதற்கு முந்தையே தி.மு.க ஆட்சியின் போது தகவல் தொழில்நுட்ப பூங்கா ஒன்று அறிவிக்கப்பட்டு, அடிக்கல் நாட்டபட்டது.
அதை வடபழஞ்சியில் அமைக்குமாறு கேட்டுகொள்கிறோம். அவ்வாறு, அப்பகுதியில் டைட்டல் பார்க்க அமையும் பட்சத்தில் அதனை சுற்றி உள்ள பகுதிகள் வளர்ச்சி பெறும். அப்பகுதிகளில், வசிக்கும் மக்களின் வாழ்வாதாரமும் உயரும்.
அதே போல், மதுரையே சுற்றி உள்ள அனைத்து மாவட்டங் களிலும் கிரைனைட் குவாரிகள் இயங்கி கொண்டு இருக்கின்றனர்.
மதுரையில் மட்டும் அனைத்து கிரைனைட்குவாரி களும் தடைசெய்யபட்டுள்ளது. இதனால், மேலூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கபட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் பூவந்தியில் கிரானைட் குவாரி செயல்படுகிறது. ஆனால், அதன் அருகில் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள கிரைனைட் குவாரிகள் இயங்கவில்லை என்பது மிகவும் வேதனைக்குரியதாக உள்ளது.
அரசு விதிகளுக்கு புறம்பாக செயல்பட்ட குவாரிகளை தவிர்த்து மற்ற கிரைனைட் குவாரிகள் இயங்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
ஆட்சியரிடம் மனு அளிக்கும் நிகழ்வில், மதுரை மேற்கு மாவட்ட த்தலைவர் சசிக்குமார், ஊடகபிரிவு கோட்ட பொறுப்பாளர் நாகராஜன், முன்னாள் ஓ.பி.சிஅணி மாநில துணைத் தலைவர் கே.ஆர்.முரளி ராமசாமி ,வழக்கறிஞர் ரவிந்திரன், வேல்முருகன்,வெற்றி கண்ணன், காளிதாஸ் கருப்பையா, சதீஷ், சோலைமணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.