Close
செப்டம்பர் 20, 2024 2:37 காலை

மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் அலைகழிக்கப்படுவதாக புகார்

மதுரை

சோழவந்தான் அருகே மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது

சோழவந்தான் அருகேயுள்ள மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் அலைகழிக்கப்படுவது தொடர்பாக  நடவடிக்கை எடுக்க  சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியம், மேலக்கால் ஊராட்சியில்  அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு
மேலக்கால் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள்  பயன் பெற்று வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக இங்குள்ள மருத்துவ பணியாளர்கள் உள் நோயாளிகள் மற்றும் புற நோயாளிகளை தொடர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி அலைக்கழிக்கப்படுவதாகவும், முறையாக சிகிச்சை அளிக்கப்படாமல் இழுத்தடிக்கப் படுவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, இரவு நேரத்தில் சிகிச்சைக்கு வருபவர்களை மருத்துவ பணியாளர்கள்சிகிச்சை அளிக்க மறுத்து வருவதாகவும், அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி காலையில் வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு திருப்பி அனுப்பப்படுவதால்,  கிராமத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், தனியார் மருத்துவமனை நோக்கி அவர்கள் செல்ல மறைமுக ஆதரவாக இருப்பதாகவும் புகார்தெரிவிக்கின்றனர். இது குறித்து, மாவட்ட அலுவலர், தலைமை மருத்துவர் அலுவலர் நேரில் விசாரணை செய்து முறையாக சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும்.மேலும், மருந்து மாத்திரை களை பற்றாக்குறை இல்லாமல் வழங்க வேண்டும் என்று கோருகின்றனர்.

இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மருத்துவத்துறை இணை இயக்குநர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top