Close
நவம்பர் 22, 2024 7:23 காலை

கோரிக்கைகளை வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

புதுக்கோட்டை

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் புதுக்கோட்டை திலகர் திடலில் நடந்த ஆர்ப்பாட்டம்

சத்துணவு திட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களை போர்க்கள அடிப்படையில் நிரப்பிட வேண்டும், ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய பண பலன்களை ஓய்வு பெறும் நாளில் வழங்க வேண்டும் என்பன  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் புதுக்கோட்டை திலகர் திடலில் மெழுகுவர்த்தி ஏந்தி நூதன முறையில் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கைகள்: சத்துணவு திட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களை போர்க்கள அடிப்படையில் நிரப்பிட வேண்டும், ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய பண பலன்களை ஓய்வு பெறும் நாளில் வழங்கப்பட வேண்டும்.

ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஒன்பதாயிரம் வழங்க வேண்டும். அரசுத்துறையில் வேலை செய்யும் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு ஊதியத்துடன் 12 மாதம் வழங்குவது போல் சத்துணவு பெண் ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

தமிழக அரசின் நிரந்தர திட்டத்தில் பணியாற்றக்கூடிய சத்துணவு ஊழியர்கள் அனைவரையும் முழு நேர அரசு ஊழியர்களாக அறிவித்து காலம் வரை ஊதியம் வழங்க வேண்டும்.

உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் புதுக்கோட்டை திலகர் திடலில் 200 க்கும் மேற்பட்டோர் மெழுகுவர்த்தி ஏந்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top