கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் வாரிசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்குபணி நியமன ஆணை வழங்க வேண்டுமென வலியுறுத்தி போக்குவரத்து துறை அமைச்சரிடம் ஏஐடியுசி கோரிக்கை மனு அளித்தனர்.
கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் தொழிலாளர்களுக்கு குளிர்சாதன ஓய்வறை மற்றும் கலந்தாய்வு கூட்ட அரங்கு அறையை இன்று காலை 11 மணிக்கு போக்குவரத்து துறை அமைச்சர் திறந்து வைத்தார் .
அப்போது தமிழ்நாட்டிலேயே அரசு போக்குவரத்து கழக ங்களில் தொழிலாளர்களுக்கு முதன் முதலாக குளிர்சாதன ஓய்வைறையை அமைத்து தந்த முதலமைச்சர் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சருக்கு நன்றியை தெரிவித்து, போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களிடம் ஏ ஐ டி யு சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் கடந்த 2016 -ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கும்பகோணம் கோட்டத்தில் வாரிசு பணிக்கு பதிந்து உள்ள வாரிசுதாரர்கள் 200 பேருக்கு நேர்முக தேர்வு நடத்தப்பட்டு, தேர்வு செய்து பணி நியமன ஆணை வழங்கப்படாமல் ஆறு வருடங்களாக காத்திருக்கின்றனர்.
இவர்களுடைய குடும்ப சூழ்நிலை கருதி உடனடியாக பணி நியமன ஆணை வழங்கிட வேண்டும், கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதுகுறித்து நீதிமன்றமும் வழங்க அறிவுறுத்தி உள்ளது.
சுமார் 86 ஆயிரம் ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் துன்பகர சூழ்நிலை கருதி அகவிலைப்படி உயர்வினை வழங்கிட முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று நிரந்தர தீர்வு காண வேண்டும்.
கடந்த 2022 ஏப்ரல் மாதம் முதல் ஓய்வு பெற்றவர் களுக்கு வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை உள்ளிட்ட பணப் பலன்கள் வழங்கப்படாமல் உள்ளதை வழங்கிட வேண்டும் அதேபோல நீண்ட கால கோரிக்கையான மருத்துவ காப்பீடு திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுக்கி அமைச்சரிடம் நேரடியாக மனு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் ஆர்.தில்லைவனம், அரசு போக்குவரத்து கழக எஐடியூசி சம்மேளனத்தின் துணைத் தலைவர் துரை.மதிவாணன், தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் எஸ்.தாமரைச் செல்வன், மாநில குழு உறுப்பினர் தி.கஸ்தூரி, ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் பி.அப்பாத்துரை, துணைத் தலைவர்கள் பி.அழகிரி,. அ.இருதயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்,