Close
நவம்பர் 22, 2024 5:30 மணி

புதுக்கோட்டை மாவட்டத்தில் கனிமவளக் கொள்ளையை தடுக்க வலியுறுத்தி தேமுதிக மனு

புதுக்கோட்டை

மாவட்ட கனிம வளக்கொள்ளையை தடுக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தேமுதிகவினர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கனிமவளக் கொள்ளையை தடுக்க வலியுறுத்தி தேமுதிக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை தேமுதிக மாவட்ட பொறுப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில், புதுக்கோட்டை மாவட்டத்தில் கனிம வளங்கள் தனியாரால் கொள்ளையடிக்கப்படுகிறது. அதை தடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டிப்பதோடு ஒவ்வொரு குவாரிக்கும் ஆழம், அகலம் அரசாங்கம் நிர்ணயிப்பது எவ்வளவு என்பதை தாண்டி குவாரிகள் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன.

இதற்கான பல்வேறு ஆதாரங்களை அனைத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், எனவே தங்களுடைய கோரிக்கையை ஏற்று உடனடியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கும் அனைத்து குவாரிகளும், மணல் குவாரிகளும் அரசு அனுமதியுடன் இயங்குகிறதா, எத்தனை குவாரிகள் அனுமதி பெற்று இயங்குகின்றன.

அந்த குவாரிகளுக்கு அரசு நிர்ணயித்த ஆழம் அகலம் எவ்வளவு என்ற தகவலை தங்களுக்கு அளிக்கும்படி கேட்டுக்கொண்டனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் காலம் தாழ்த்தினால் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் குவாரிகளை முற்றுகையிட்டு மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் எனவும் மனுவில் தெரிவித்துள்ளனர்.

தேமுதிக சார்பில் பலமுறை கோரிக்கை வைத்தும்,  மாவட்ட நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் ராக்கத்தான்பட்டியில் செயல்பட்டு வரும் கல்குவாரியில் விபத்து ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதோடு பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top