Close
நவம்பர் 22, 2024 12:48 மணி

நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை ரத்துசெய்யக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர்

விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் மிகுந்த கேட்டை விளைவிக்கும் நில ஒருங்கிணைப்பு சட்டம். சட்டம் 2023-ஐ திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் சங்கங்களின் சார்பில் புதுக்கோட்டையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் மாவட்டச் செயலாளர்கள் ஏ.ராமையன், எஸ்.சி.சோமையா ஆகியோர் தலைமை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளர் த.இந்திரஜித் உரையாற்றினார். விவசாயத் தொழிலாளர் சங்க மாநில செயலாளர் எஸ்.சங்கர் நிறைவுரையாற்றினார்.

கோரிக்கைகளை விளக்கி விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பொன்னுச்சாமி மற்றும் நிர்வாகிகள் த.செல்வராஜ், எம்.பாலசுந்தரமூர்த்தி, ஏ.எல்.ராசு, த.அன்பழகன், எஸ்.நாராயணசாமி, க.சுந்தர்ராஜன், டி.அம்பலராஜ், மாரக்கண்டேயன் உள்ளிட்டோர் பேசினர்.

நிலம், நீர்நிலைகளை பெரும் தொழில் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் நில ஒருங்கிணைப்பு சட்ட மசோதவை திரும்பப்பெற வேண்டும். உணவில் அரிசியோடு  செறிவூட்டப் பட்ட அரிசியை கலப்பதை உடனடியாக கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட முழங்கங்கள் ஆர்ப்பாட்டத்தின் போது எழுப்பப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top