Close
நவம்பர் 22, 2024 12:25 காலை

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் 10% இட ஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது

தமிழ்நாடு

புதுக்கோட்டையில் நடைபெற்ற பிற்படுத்த சமுதாயங்களின் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்

சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தாமல் . 10 சதவீத இட ஒதுக்கிடை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது மத்திய அரசு அதை வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வருகின்ற  ஜூன் 12 ஆம் தேதி அன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் உரிமைக்கான கூட்டமைப்பின் தலைவர் ரத்தின சபாபதி  தெரிவித்தார்.

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள வீர சைவ பேரவை அலுவலகத்தில் மத்திய மண்டல செயலாளர் சரவண தேவா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் ரத்ன சபாபதி செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்ட மைப்பு மற்றும் சமூக நீதிக் கூட்டமைப்பு சார்பில் இந்த 255 சமுதாயங்களுக்கும் இட ஒதுக்கீடு பாதிக்கப்பட்டுள்ளதால் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்திய பின்னர் தான் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்துவது பரிசீலிக்கப்பட வேண்டும்

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை முன்வைத்து வரும் ஜூன் 12 -ஆம் தேதி அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அனைத்து சமுதாய மக்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top