Close
நவம்பர் 21, 2024 11:29 மணி

ஊதியம் வழங்காததைக் கண்டித்து உள்ளாட்சித் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

பல மாதங்களாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து உள்ளாட்சித் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பல மாதங்களாக  ஊதியம் வழங்காததைக் கண்டித்து
உள்ளாட்சித் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

கிராம ஊராட்சிகளில் வேலைசெய்யும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆப்பரேட்டர், தூய்மை காவலர், தூய்மைப் பணியாளர், டெங்கு கொசு புழு ஒழிப்புப் பணியாளர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்காததைக் கண்டித்து சிஐடியு சார்பில் புதுக்கோட்டையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு உள்ளாட்சித் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டப் பொதுச் செயலாளர் க.முகமதலி ஜின்னா தலைமை வகித்தார்.

கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாநில செயலாளர் ஏ.ஸ்ரீதர், மாவட்டப் பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள்; ஏ.முத்தையா, ஆர்.சி.ரெங்கசாமி, என்.ராஜா உள்ளிட்டோர் பேசினர்.

கிராம ஊராட்சிகளில் வேலை செய்யும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆப்பரேட்டர், தூய்மை காவலர், தூய்மைப் பணியாளர், டெங்கு கொசு புழு ஒழிப்புப் பணியாளர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்காததைக் கண்டித்தும்,  அரசு அறிவித்தபடி 38 விழுக்காடு ஊதிய உயர்வுடன் அனைத்து ஊராட்சி ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

தூய்மை காவலர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். 7-ஆவது ஊதியக்குழு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க  வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தின் போது எழுப்பப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top