கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள், டெங்கு பணியாளர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊராட்சி மேல்நிலை நீர் தேக்க தொட்டி பவர் பம்ப் இயக்குபவர்கள் தூய்மை பணியாளர்கள் தூய்மை காவலர்கள் மாநில மாவட்ட சங்கம் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்கள் துப்புரவு பணியாளர்கள் தூய்மை காவலர்கள் டிபிசி டெங்கு பணியாளர்களுக்கு மாதம் ஐந்தாம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும்.
நான்கு மாதம் ஐந்து மாதம் ஊதியம் நிலுவையில் உள்ளதை உடனடியாக வழங்க வேண்டும். கிராம ஊராட்சிகளில் 20,30 ஆண்டுகளாய் பணி புரியும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குனர்களை பணி நிரந்தரம் செய்து ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து தமிழ்நாடு ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பவர் பம்பு இயக்குபவர்கள் தூய்மை பணியாளர்கள் தூய்மை காவலர்கள் மாநில மாவட்ட சங்கம் சார்பில் மாநிலத் துணைத் தலைவரும் மாவட்ட தலைவருமான திரவியராஜ் தலைமையில் மனு அளித்தனர்.