Close
செப்டம்பர் 20, 2024 4:05 காலை

திமுக எம்பியிடம் கோரிக்கை மனு அளித்த விவசாயிகள்

புதுக்கோட்டை

திமுக எம்பி அப்துல்லாவிடம் மனு அளித்த விவசாயிகள்

விவசாயிகளின் கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி  திமுக  எம்பி அப்துல்லாவிடம் மனு அளித்த விவசாயிகள்

பிரதமர் மோடி அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி  புதுக்கோட்டை மாவட்ட  விவசாய சங்கப் பிரதிநிதிகள் ஞாயிற்றுக்கிழமை மாநிலங்களவை  திமுக உறுப்பினர் எம்.எம்.அப்துல்லாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

விவசாயிகளுக்கு விரோதமாக ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தி தலைநகர் தில்லியில் விவசாயிகள் இரண்டு வருடத்திற்கும் மேலாக தொடர்ச்சியான போராட்டங் களை நடத்தி வந்தனர்.

விவசாயிகள் ஐக்கிய முன்னணியின் சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதோடு, விவசாயிகளின் இதரக் கோரிக்கை களையும் நிறைவேற்று வதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

ஆனால், பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகள் எதையும் இதுநாள்வரை நடைமுறைப் படுத்தப்படவில்லை. எனவே, விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு அளித்த வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புமாறு அந்தந்தப் பகுதி எம்பி-க்களிடம் கோரிக்கை மனு அளிப்பது என ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் சார்பில் முடிவெடுக்கப்பட்டது.

அதனொரு பகுதியாக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லாவிடம் ஞாயிற்றுக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. விவசாயிகள் ஐக்கிய முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.சி.சோமையா தலைமை யில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ராமையன், ராஜாங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விவசாயத் தொழிலாளர் சங்க மாநில செயலாளர் எஸ்.சங்கர், விவசாயிகள் சங்க மத்தியக்குழு உறுப்பினர் மு.மாதவன், இந்திய விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் ஜி.தனபதி, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பொனுச்சாமி மற்றும் நிர்வாகிகள் கே.சுந்தர்ராஜன், டி.சலோமி, கே.சண்முகம், ஆர்.முருகானந்தம், தங்கராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேறனர்.

மனுவைப் பெற்றுக்கொண்ட எம்.எம்.அப்துல்லா எம்பி.,  விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவேன் என சங்க நிர்வாகிகளிடம் உறுதியளித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top