Close
செப்டம்பர் 20, 2024 3:46 காலை

காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள்

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் வளர்ச்சித் திட்ட வட்டார அலுவலங்கள் முன்பாக திங்கள்கிழமை ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் டி.சாந்தி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட துணைத் தலைவர் சுலோக்சனா, ஒன்றியச் செயலாளர் மகேஸ்வரி, சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் சி.அன்புமணவாளன் உள்ளிட்டோர் பேசினர்.

கந்தர்வகோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் என்.மணிகேலை தலைமை வகித்தார். மாநில பொருளாளர் எஸ்.தேவமணி கண்டன உரையாற்றினார்.

திருவரங்குளத்தில் ஒன்றியத் தலைவர் விசாலாட்சி தலைமையில் மாவட்டச் செயலாளர் ஏ.சி.செல்வி உரையாற்றினார்.

அன்னவாசலில் ஒன்றித் தலைவர் என்.மாலா தலைமையில் மாவட்டத் தலைவர் பி.விஜயலெட்சுமி பேசினர். இதேபோல மாவட்டத்தில் உள்ள அனைத்து குழந்தைகள் வளர்ச்சித்திட்ட வட்டார அலுவலங்கள் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அங்கன்வாடி மையங்களை இணைப்பு என்கிற பெயரில் மூடும் நடவடிக்கையை கைவிட வேண்டும். தகுதியான அங்கன்வாடி ஊழியர்களை மேற்பார்பைவயாளர் களாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.

10 வருடம் பணிமுடித்த உதவியாளர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். இதர பெண் அரசு ஊழியர் களுக்கு வழங்குவதைப் போல ஒரு வருடம் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டங்களில் எழுப்பப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top