Close
செப்டம்பர் 20, 2024 1:43 காலை

அரசு ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அரசு ஊழியர்கள் பேரணி

புதுக்கோட்டை

பைல் படம்

அரசு ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி
அரசு ஊழியர்கள் பேரணி நடைபெற்றது.

ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்களுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்ட கோரிக்ககைளை நிறைவேற்றக்கோர் புதுக்கோட்டையில் அரசு ஊழியர்கள் சார்பில்  திங்கள் கிழமை பேரணி நடத்தப்பட்டது.

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் தொடங்கிய  பேரணிக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சே.ஜபருல்லா தலைமை வகித்தார்.

நிர்வாகிகள் க.குமரேசன், பாலமுருகன், கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  பேரணியை துவக்கி வைத்து அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.முத்தையா பேசினார்.

கோரிக்ககைளை விளக்கி மாவட்டச் செயலாளர் இரா.ரெங்கசாமி பேசினார். மாநில செயலாளர் ச.ஹேமலதா நிறைவுரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் ரமா ராமநாதன் நன்றி கூறினார்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும். மாநகராட்சி, நகராட்சிகளில் நிரந்தரப் பணியிடங்களை அழித்திடும் அரசாணை 152-ஐ ரத்து செய்ய வேண்டும். கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அகவிலைப்படி, சரண்டர் விடுப்பு உள்ளிட்டவைகளைத் திரும்ப வழங்க வேண்டும்.

பள்ளிகளில் காலை சிற்றுண்டித் திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக செயல்படுத்த வேண்டும். தொகுப் பூதியம் பெறும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் பேரணியில் எழுப்பப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top