நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்ட திராவிட கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் புதுக்கோட்டை திலகர் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை திலகர் திடலில் திராவிடர் கழக மாவட்ட இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட இளைஞரணித் தலைவர் கா.காரல்மார்க்ஸ் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணிச் செயலாளர் தி.பொன்மதி வரவேற்றார்.மாவட்ட காப்பாளர் ஆ.சுப்பையா, மாவட்டத் தலைவர் மு.அறிவொளி, மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன், நகரத் தலைவர் சு.கண்ணன், நகரச் செயலாளர் ரெ.மு.தருமராசு மாவட்ட மாணவர் கழகத் தலைவர் நே.குட்டி வீரமணி, திருச்சி கணேசன்- ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் இரா.செந்தூரப் பாண்டியன், திருச்சி க.அ.யாழினி ஆகியோர் கண்டன உரையாற்றினர்
.
மாவட்ட துணைச் செயலாளர் வெ.ஆசைத்தம்பி, பொன்னமராவதி ஒன்றியச் செயலாளர் வீ.மாவலி, மாவட்ட துணைச் செயலாளர் செ.இராசேந்திரன், நகர இளைஞரணிச் செயலாளர் பூ.சி.இளங்கோ, திருமயம் ஒன்றியச் செயலாளர் க.மாரியப்பன், தாமரைச்செல்வன், மரகதம், ஆலங்குடி நெடுஞ்செழியன், பொன்னமராவதி மனோகரன் உள்ளிட்ட திராவிடர் கழக பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு நீட் விலக்கு மசோதாவுக்கு தமிழ்நாட்டின் மசோதாவுக்கு குடியரசு தலைவரே ஒப்புதல் வழங்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு எதிராய் நீட் தேர்வை திணிக்க வேண்டாம். தமிழ்நாட்டு மாணவர் உயிரை பறிக்கும் ஆளுநர் ஆர். என். ரவி தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர்.