பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்.
பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெருந்துறையை அடுத்துள்ள சானிடோரியத்தில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமார் 200 -க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படை யில் பணிபுரிந்து வருகின்றனர்.
தனியார் நிறுவனம் ஒன்று தினக்கூலி அடிப்படையில் இவர்களை பணியில் அமர்த்தி உள்ளது. இதில் 40 பேர் மட்டுமே வார்டுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர் இதனால் வேலை பளு அதிகம் இருப்பதாகவும் வார விடுமுறை வழங்க கோரியும், ஆகஸ்ட் 24 -ஆம் தேதியிலிருந்து ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலையை புறக்கணித்து கல்லூரி மருத்துவமனை நுழைவு வாயில் முன் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களிடம் வருவாய் துறையினர் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்திடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் இதுவரை சுமூக முடிவு ஏற்படாததால் ஒப்பந்த பணியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.