Close
நவம்பர் 22, 2024 10:41 காலை

அரசு மதுபானக்கடை வேண்டும்… ஆட்சியரிடம் மனு அளித்த விநோதம்

மதுரை

மதுரை அருகே மதுக்கடை திறக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

அலங்காநல்லூர் அருகே அரசு மதுபான கடை வேண்டி  கல்லணை ஊராட்சி மன்ற தலைவர் மனு  அளித்து மாவட்ட ஆட்சியரை கலங்கடித்துள்ளார்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, கல்லணை ஊராட்சியில், அரசு மதுபான கடை திறக்க வேண்டும் என, ஊராட்சி மன்றத் தலைவர், மதுரை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது: மதுரை அருகேஅலங்காநல்லூர் பாலமேடு குமாரம், பாசிங்காபுரம், கொண்டையம்பட்டி, ஆகிய பகுதிகளில் 7 -க்கும் மேற்பட்ட அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வந்தன.

அந்த கடைகள் ஏதோ ஒரு காரணத்திற்காக மூடப்பட்டன. தற்போது, மது பிரியர்கள் மது பாட்டில்கள் வாங்க பல கிலோ மீட்டர் தொலைவிற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும், அலங்காநல்லூர் ஒன்றியத்திற்கு சுற்றி 80க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் இல்லாததால் இவர்கள் மது வாங்க வேண்டும் என்றால் 15 அல்லது 20 கிலோமீட்டர் வரை சென்று தான் வாங்கி வர வேண்டும்ஆகவே இப்பகுதியில் அரசு மதுபான கடை அமைக்க வேண்டும்.

வெளியிடங்களில் இருந்து மது பாட்டிலை வாங்கி வரும்போது போலீசார் சோதனைக்கு உட்படுத்து மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அத்துடன் எங்களது ஊராட்சியில் அரசு மதுபான கடை இல்லாததால், மது பிரியர்கள் வேறு பாதைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.ஆகவே, கல்லணை ஊராட்சியில், பள்ளி மற்றும் மருத்துவமனை சம்பந்தப்படாமல் ஒதுக்கு புறமாக ஒரு இடத்தில் அரசு மதுபான கடை திறக்க வேண்டுமென, கல்லணை ஊராட்சி மன்றத் தலைவர் சேது சீனிவாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மதுக்கடைகளை திறக்கவும், இடத்தை மாற்றவும், மூடவும்  பொதுமக்கள் மற்றும்  பெண்கள் வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபடு வதைத்தான்  பரவலாகப் பார்த்து வருகிறோம். ஆனால், ஊராட்சி மன்றத்தலைவர் தனது பகுதியில் அரசு மதுபானக்கடையை  திறக்க வேண்டுமெனக் கோரி மனு அளித்தது அனைவரையும்  கலக்கத்திலும் வியப்பிலும்  ஆழ்த்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top