Close
நவம்பர் 22, 2024 6:10 காலை

மழை நீர் தேங்கியதைக் கண்டித்து அறந்தாங்கியில் நூதனப் போராட்டம்

புதுக்கோட்டை

அறந்தாங்கி அருகே சாலையில் நீர் தேங்கியதால் மக்கள் அவதி

அறந்தாங்கி  எம்ஜிஆர்  நகர் பகுதியில் பெய்த கனமழையால் நீர் சாலையில் தேங்கி வாகனங்கள் சொல்ல முடியாத நிலையைக் கண்டித்து பொதுமக்கள்  சாலையின் குறுக்கே கயிறை கட்டி  போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகர் பகுதியில் நேற்று பெய்த கனமழையால் சாலையில் தேங்கி உள்ளது. இந்த நீரால் வாகனங்கள் செல்ல முடியாமல் திணறி வருகின்றது

குறிப்பாக இப்பகுதியில் அதிகமான பொது மக்கள் வசியக் கூடிய இடத்தில் சரியான முறையில் வடிகால் வசதி இல்லாமல் இருப்பதால் நீர் செல்ல முடியாமல் உள்ளது

குறிப்பாக இந்த பகுதியில் நீண்ட நாட்களாக நீர் தேங்கி அதன் மூலம் கொசு உற்பத்தியாகி இப் பகுதியில் இருக்கக்கூடிய பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படுத்தக்கூடிய வகை யிலும் இருக்கின்றது என கூறுகின்றனர்.

இது குறித்து பலமுறை அரசு அதிகாரியிடம் மனு அளித்தும் எந்த ஒரு பயனும் இல்லை என கூறுகின்றனர்.குறிப்பாக இப்பகுதியில் அதிகளவில் பள்ளி மாணவ மாணவிகள் இருப்பதால் பள்ளிக்கு செல்லக்கூடிய நேரத்தில் இந்த சாக்கடை நீரில் விழுந்து விபத்து ஏற்படுத்தக்கூடிய வகையில் இருக்கின்றது என குற்றம் சாட்டுகின்றனர்

ஆகவே அரசு அதிகாரிகள் இதை கவனத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து கப்பகுதியில் சாக்கடை நீர் தேங்காத வண்ணம் சரியான முறையில் வடிகால் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்து தற்பொழுது அந்த பகுதியில் உள்ள சாலையில் முள்செடியை வெட்டி போட்டு சாலையின் குறுக்கே கயிறு கட்டி யாரும் வர வேண்டாம் என எச்சரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் இப்பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top