Close
ஜூலை 4, 2024 4:39 மணி

வரையறுக்கப்பட்டபணிகளை மட்டுமே கேங்மேன்களிடம் வழங்கக்கோரி தர்ணா

புதுக்கோட்டை

கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மென் தொழிலாளர்கள்

தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிலாளர்களிடம் வரையறுக் கப்பட்ட வேலையை தவிர மற்ற அனைத்து வேலைகளையும் மின்துறை அதிகாரிகள் செய்யக் கட்டாயப்படுத்துவதைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் புதுக்கோட்டை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்சார வாரியத்தில் 300க்கும் மேற்பட்டோர் கேங்மேன் பணிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்அனைத்து கேங்மேன் பணியாளர்களுக்கு புதிய மின் கம்பம் நடுதல் புதிய மின் பாதை அமைத்தல், மின்மாற்றி கட்டமைப்பு பணிகள் மின்மாற்றி களங்கள் துணை மின் நிலைய கலன்களை சுத்தமாக பராமரிக்கும் பணி மற்றும் தரையில் மேற்கொள்ளப்படும் மின்சாரம் இல்லாத பணிகள் ஆகியவற்றை மட்டும் மேற்கொள்ள வேண்டும்,

புதிய மின் பாதை அமைக்கும் பணியை மட்டும் மேற்கொள்ள வேண்டும், இணைப்பு கொடுக்கும் பணியினை அந்தப் பகுதி கம்பியாளர்கள் தான் மேற்கொள்ள வேண்டும்,மின்னோட்டம் செய்யப்பட்டு மின்சாரம் செல்லும் மின் தொடர்கள் மற்றும் தாழ் வளர்த்த மற்றும் உயர் அழுத்தம் மின் பாதைகளில் பணி செய்யக்கூடாது,

மின்கம்பங்களை ஏற்றி இறக்குதல் உப பாண்டகசாலை மற்றும் மத்திய மண்டக சாலையில் தளவாட பொருட்கள் ஏற்றி இறக்குதல் போன்ற மின்சார இல்லாத பகுதிகளில் பணியாளர்களை ஒரு குழுவாகவோ அல்லது அந்த உட்கோட்ட குழுவாகவும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர்கள் புதுக்கோட்டை மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இது பற்றி தொழிலாளர்கள் கூறுகையில், வரையறுக்கப்பட்ட வேலைகளை மட்டும் வழங்காமல் லைவ் லயன் வேலைகளை பார்க்க கூறுவதாகவும் இதனால் கடந்த இரண்டு வருடங்களில் 2 -க்கும் மேற்பட்டோர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாகவும் இதனால் அவர்களுடைய குடும்ப வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே வரையறுக்கப்பட்ட வேலைகள் மட்டுமே வழங்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top