Close
நவம்பர் 21, 2024 11:12 மணி

கொரோனா, டெங்கு, கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி வழங்கக்கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

கொரோனா, டெங்கு, கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி வழங்கக்கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

கொரோனா, டெங்கு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணியா ளர்களுக்கு குறைந்தபட்ச கூலி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வலியுறுத்தி உள்ளாட்சித்துறை தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் வியாழக்கிழமை புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளில் டெங்கு, கொரோனா, சிக்கன் குனியா, மலேரியா போன்ற நோய்களை ஒழிக்கும் பணிகளில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின் றனர்.  இவர்களுக்கு, சட்டத்திற்கு எதிராக தொடர் பணி மறுப்பு, பாதுகாப்பு உபகரணங்கள், குறைந்தபட்ச கூலி வழங்கப்படுவதில்லை.

இவர்களுக்கு உடனடியாக குறைந்தபட்ச கூலி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். 10 ஆண்டு களுக்கும் மேல் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சுழற்சி முறையை கைவிட்டு தொடர்ச்சியாக பணி வழங்க வேண்டும். அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். விபத்து நிவாரணம் ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.

போராட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சித்துறை தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் என்.ராஜா தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டப் பொதுச் செயலாளர் க.முகமதலிஜின்னா சிறப்புரையாற்றினார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எஸ்.யாசிந், துணைச் செயலாளர் சி.மாரிக்கண்ணு மற்றும் சங்க நிர்வாகிகள் ஏ.சி.மாணிக்கம், ஏ.முத்தையா, சி.ரெங்கசாமி, எஸ்.செல்வம் உள்ளிட்டோர் பேசினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top