Close
நவம்பர் 24, 2024 1:17 மணி

வீட்டுமனைப்பட்டாக்கேட்டு ஊனையூர் கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

புதுக்கோட்டை

வீட்டுமனைப் பட்டாக்கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த ஊனையூர் கிராம மக்கள்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே ஊனையூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் உள்ள 32 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் மேலும் அருகே உள்ள ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, ஊனையூர் கிராமத்தில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் 1999 -ஆம் ஆண்டு 32 -க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீடு வழங்கப் பட்டது. இந்நிலையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் ஆதிதிராவிட மக்களுக்கு தனிப்பட்ட வழங்காமல் உள்ளதால் வீடு கட்டுவதற்கு வங்கியில் கடன் வாங்க முடியாமலும், பல்வேறு சலுகைகளும் பெற முடியாமலும் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மேலும் இது தொடர்பாக ஆதிதிராவிட நலத்துறை அலுவலகத்தையும் திருமயம் தாலுகா அலுவலகத்திலும் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என மனு கொடுத்தும் இதனால் வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும் குடியிருப்பு பகுதி அருகே உள்ள காலியான இடங்களை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி குழந்தைகள் விளையாடுவதற்கு விளையாட்டு மைதானம் மற்றும் சமுதாயக்கூடம் கட்டித் தர வேண்டும்.

இது நாள் வரை எந்த ஒரு நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை என்பதால்  தற்பொழுது மாவட்ட ஆட்சியர் உடனடியாக 32 குடும்பங்களுக்கு தனித்தனியாக வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என  மனு அளித்ததாகவும் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top