Close
நவம்பர் 10, 2024 5:40 காலை

பத்திரிகையாளர் நல வாரியம்: அகில இந்திய பத்திரிகை ஊடக சங்கம் சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

சென்னை

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அகில இந்திய பத்திரிகை ஊடக சங்கம் சார்பில் நடந்த கவனஈர்ப்பு

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அகில இந்திய பத்திரிகை ஊடக சங்கம் சார்பில் தமிழக அரசு அமைத்துள்ள பத்திரிகையாளர் நல வாரிய குழுவில் பத்திரிகையாளர்கள் சங்கத்தையும் நியமிக்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அகில இந்திய பத்திரிகை ஊடக சங்கத்தின் தலைவர் வேல்முருகன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்  நடந்தது.

 வியாசை முரளி, இனியன் ஆகியோர்  வரவேற்றனர். இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு  வீரத் தமிழர் ஆ.வேல்முருகன் தேசிய தலைவர் (AIPMA)  தலைமை  வகித்தார்.  சிறப்பு அழைப்பாளர்களாக சி.ஆர். பாஸ்கரன் நிறுவனர்(நீதியின்குரல் அமைப்பு), மூத்த பத்திரிகையாளரும், இலக்கிய எழுத்தாளருமான கொடைக்கானல் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தஞ்சை தமிழ்பித்தன் (தலைவர்-தமிழ் சங்க பலகை), டி.எஸ்.ஆர் சுபாஷ் (தலைவர் -தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜெர்னலிஸ்ட்), கதிர்வேல் (பொது செயலாளர்- தமிழ்நாடு ஆல் மீடியா ஜெர்னலிஸ்ட் யூனியன்) ,சிவதமிழன் (தலைவர்-தமிழ்நாடு பிரஸ் அன்ட் மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன்) ,வி.எம்.தமிழன் வடிவேல் (பொது செயலாளர்-ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கம்), பழனி கண்ணன்(ஊடக உரிமைக் குரல்) ,  கார்த்திகேயன்(நாற்காலி செய்தி ஆசிரியர்) ,

தருமராஜா( தலைவர்-இந்திய ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நல சங்கம்) , என்.கே.முத்தையா (பொருளாளர்-தமிழ்நாடு செய்தி துறை யூனியன்),மதி ஒளி ராஜ்குமார் (ஆசிரியர் -திரைதீபம்) , முஸ்தபா (பத்திரிகையாளர்), ஜிபிஎஸ்.கார்த்திக் (தலைவர் தென்னிந்திய ஒருங்கிணைந்த பத்திரிகையாளர்கள் சங்கம்) உள்பட பல்வேறு சங்கங்களின்  நிர்வாகிகள் கலந்து கொண்டு பத்திரிகையாளர் நல வாரியம் தொடர்பாக தமிழக அரசின் அறிவிப்பில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்.

நல வாரிய குழுவில் மூத்த பத்திரிகையாளர்களை நியமிக்க வேண்டும் என்றும், பத்திரிகையாளர்களின் சங்கத்தையும் நியமிக்க வேண்டும் என்று அனைத்து சங்கத்தின் நிர்வாகிகளும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதில் பத்துக்கும் மேற்பட்ட சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top