Close
செப்டம்பர் 19, 2024 11:15 மணி

ஊர்க்காவல்படையினருக்கு பல மாதங்களாக நிலுவையில் உள்ள ஊதியம் கிடைக்குமா

புதுக்கோட்டை

ஊர்க்காவல்படை

 ஊர் காவல் படை வீரர்களுக்கு நிலுவையில் உள்ள 10 மாத சம்பள தொகையை வழங்கி உதவிட வேண்டுமென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஊர் காவல்படை வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்திற்கு விடியல் தந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  தலைமையிலான அரசு ஊர் காவல்படை வீரர்களுக்கு விடியலைத் தர வேண்டுமென எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
நாட்டில் கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை மற்றும் தற்போது நடைபெற்று முடிந்த நகர்புற,உள்ளாட்சி தேர்தல் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் காவல் துறையினருடன் இணைந்து ஈடுபட்டு வரும் ஊர் காவல்படை வீரர்களுக்கு நிலுவையிலுள்ள பத்து மாத சம்பள தொகையை உடனே வழங்கி உதவிட வேண்டும் என்ற கோரிக்கை சில மாதங்களாக வலுத்து  வருகிறது.

தமிழகம் முழுவதும் ஏற்பட்ட கொரோனா நோய் தொற்று காலத்தில் காவல் துறையினருடன் இணைந்து பணியாற்றி வரும் ஊர் காவல்படை வீரர்களின் 10 மாத காலமாக சம்பளம் நிலுவையில் உள்ளதால் ஊர் காவல்படை வீரர்களின் குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருவகின்றனர். ஊர் காவல்படை வீரர்களின் குடும்பத்தின் வறுமை நிலையறிந்து நிலுவையில் உள்ள சம்பள தொகையை வழங்கியும், தமிழக காவல் துறையினருக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 5000 வழங்கியது போல் ஊர் காவல்படை வீரர்களுக்கும் உதவித் தொகையாக 5000 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும், மற்ற மாநிலங்களை போன்று தமிழகத்திலும் ஊர் காவல் படை வீரர்களின் பணியினை நிரந்தரமாக்க வேண்டும், அல்லது அதிக நாட்கள் வேலை வழங்க வேண்டும் மற்றும் முன் களப்பணியாளராக அறிவிக்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  மனது வைத்து  நிறைவேற்றித்தர வேண்டுமென  ஊர் காவல் படை வீரர்கள் வலியுறுத்துகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top