Close
செப்டம்பர் 20, 2024 1:40 காலை

வரலாறு காணாத சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்பப் பெற கோரிக்கை

கோரிக்கை

தமிழக முதல்வருக்கு பொன்னுசாமி கோரிக்கை

வரலாறு காணாத சொத்து வரி உயர்வை  தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க (நிறுவனத் தலைவர்) சு.ஆ.பொன்னுசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் ஒருபுறம் நுகர்வோருக்கான எரிவாயு, வாகன எரிபொருள், சமையல் எண்ணெய், பருப்பு வகைகள் உள்ளிட்ட அத்தியாவ சிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே போகும் சூழலில் மற்றொரு புறம் வணிக பயன் பாட்டிற்கான எரிவாயு விலை, சுங்கக்கட்டணம் உள்ளிட்ட வையும், தொழிற் சாலைகளுக்கான உற்பத்தி மூலப்பொ ருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து கொண்டே சென்று ஏழை, எளிய, நடுத் தர மக்களையும், வணிகர்க ளையும் கடுமையாக பாதித்துள் ளது.

இந்நிலையில் ஒன்றிய அரசு போல் தமிழக அரசும் தன் பங்கி ற்கான தாக்குதலை தொடுக்கின்ற வகையில் 25% முதல் 150% வரை சொத்து வரியை உயர்த்தி பொதுமக்கள் தலையில் மிகப்பெரிய பாரத்தை சுமத்தியிருப்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

ஏற்கெனவே கடந்த அதிமுக ஆட்சியில் சொத்துவரி உயர்த் தப்பட்ட போது அதனை கடுமையாக எதிர்த்த திமுக தற்போது அதே தவறை சத்தமின்றி செய்திருப்பதை கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள முடியாது.

ஏனெனில் இந்த சொத்து வரி உயர்வின் காரணமாக வீட்டு வாடகை, கடை வாடகை உடனடியாக கடுமையாக உயரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா நோய் பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு தொழில்களும் கடுமையாக நலிவடைந்து போனதால் வணிகர்கள் தொழில்களை இழக்க, பொதுமக்கள் வேலையிழந்து, அதன் காரணமாக தங்களின் வாழ்வா தாரத்தை இழந்து தவித்து வருவது தொடர்கதையாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போதைய பலமடங்கு சொத்து வரி உயர் வினால் வீடு, கடை வாடகையும் பலமடங்காக உயரும் போது அது பொதுமக்களையும், வணிகர்களையும் இன்னும் கடுமை யாகவே பாதிக்கும் அதனால் மிகப்பெரிய அளவில் பொருளா தார நெருக்கடிக்கு பொதுமக்கள் உள்ளாக நேரிடும்.

ஆட்சிக்கு வருவதற்கு முன் மக்கள் நலனே தங்களின் உயிர் மூச்சு என முழங்கியவர்கள் ஆட்சிக்கு வந்து, உள்ளாட்சித் தேர்தலிலும் வென்று பதவிகளை கைப்பற்றிய பிறகு ஏழை, எளிய மக்களுக்கான அரசு என்கிற மாயபிம்பத்தை அச்சு, காட்சி, சமூக வலைதள ஊடகங்கள் மூலம் கட்டமைத்துக் கொண்டு தங்களின் கடந்த கால நாடகத்தை மறைத்து, மக்க ளின் உயிர் மூச்சை மொத்தமாக நிறுத்தப் பார்க்கிறது தற்போதைய திமுக அரசு.

மேலும் தேர்தலுக்கு முன் இலவசம், இலவசம் என்று வாக்குறு திகளை வாரி இறைத்து விட்டு தற்போது ஒவ்வொன்றாக கட்டணங்களை உயர்த்திக் பொதுமக்கள் தலையில் சுமையை ஏற்றிவைக்க  முயலும் தமிழக அரசு மக்கள் விரோத நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

தற்போது மக்கள் தலையில் மிகப்பெரிய அளவில் சுமத்தப் பட்டுள்ள இந்த சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்பப் பெற்று திமுகவிற்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் போராட பொதுமக்கள் தன்னெழுச்சியாக கிளர்ந்தெழாமல் இருப்பதை தமிழக முதல்வர்  உறுதி செய்து கொள்ளட்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top