பொன்னமராவதியில் வேகத்தடைக்கு வெள்ளை நிற சாயம் பூச வேண்டுமென நெடுஞ்சாலை துறையினருக்கு வானக ஓட்டிகள், பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் புதிதாக போடப்பட்ட தார் சாலை உள்ள வேகத்தடைக்கு வெள்ளை நிறம் சாயம் பூச வேண்டும் என நெடுஞ்சாலை துறையின ருக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு பொன்னமராவதி நாட்டுக்கல் பிரதான சாலை நெடுஞ்சாலை துறையினரால் மறு சீரமைப்பு செய்யப்பட்டது. மறு சீரமைப்பு செய்யப்பட்ட அப்பகுதியில் நெடுஞ்சாலை துறையினர் வேகத்தடை அமைத்தனர்.
புதிதாக அமைக்கப்பட்ட அமரகண்டான் ஊருணி அருகில் உள்ள வேகத்தடை மற்றும் வலையப்பட்டி சாலையில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையில் வெள்ளை நிற பெயிண்ட் அடிக்கப்படாததால் அப்பகுதியில் செல்லக்கூடிய இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.
வெள்ளை நிற பெயிண்ட் இல்லாமல் இருக்கும் புதிதாக போடப்பட்ட வேகத்தடைகளில் வெள்ளை நிற பெயிண்ட் அடிக்க வேண்டும். அதன் அருகில் இரு புறங்களிலும் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், வாகன ஓட்டிகள்,பொது மக்கள் நெடுஞ்சாலை துறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.