மோடி தலைமையிலான ஒன்றிய அரசு எல்ஐசி நிறுவனத்தின் 3.5 % பங்குகளை விற்பனை செய்யும் முடிவைக் கண்டித்து புதுக்கோட்டை எல்ஐசி ஊழியர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மோடி தலைமையிலான ஒன்றிய அரசு சிறந்த முறையில் இயங்கிவரும் எல்ஐசி நிறுவனத்தின் 3.5 % பங்கினை பங்குச் சந்தையில் விற்பனை செய்யப்போதாக அறிவித்துள்ளது. இந்த முடிவை திரும்பப் பெற வலியுறுத்தி நாடுமுழுவதும் எல்ஐசி ஊழியர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதனொரு பகுதியாக வருகின்ற மே.4-ஆம் தேதி எல்ஐசி பங்கு விற்பனையைக் கண்டித்து இரண்டு மணிநேர வெளிநடப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
இந்தப் போராட்டத்தை விளக்கி திங்கள்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆயுள் காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் தஞ்சை கோட்டத் துணைத் தலைவர் என்.கண்ணம்மாள் தலைமை வகித்தார். புதுக்கோட்டை கிளைச் செயலாளர் என்.குருமூர்த்தி மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.