புதுக்கோட்டையில் தமிழக சத்துணவு ஊழியர் சங்க மாவட்டசெயற்குழு கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டையில் தமிழக சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட அறிவியல் இயக்க அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கே .சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எஸ் . அம்பிகாபதி வரவேற்புரையாற்றி வேலை அறிக்கை சமர்ப்பித்தார்.
தமிழக சத்துணவு ஊழியர் சங்க செயற்குழு கூட்டம் தீர்மான நகலை மாவட்ட நிர்வாகிகள் வெளியிட திருவரங்குளம் ஒன்றிய தலைவர் ஈஸ்வரி மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: சத்துணவு ஊழியர்களின் கோரிக்கையான காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உயர்த்துதல், பணி ஓய்வின் போது ஒட்டு மொத்த தொகையை உயர்த்துதல் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் நடப்பு கூட்டத் தொடரில் அறிவிக்க வேண்டும்.
சத்துணவு மையங்களை சிறப்பாக நடத்திட ஏதுவாக ஊழியர்களின் காலி பணி இடங்களை உடன் நிரப்பிட நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். ஊராட்சி ஒன்றிய புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய சத்துணவு மேலாளர் செயல்பாடு சரியாக இல்லாததால் சத்துணவு ஊழியர்களின் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட மையத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரின் (ஊரக வளர்ச்சி) நேர்முக உதவியாளர் (பிஏ.பிடி) மனு அளித்து வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதுவரை அவர் மாற்றப்படவில்லை. மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓய்வூதியம் ஒட்டு மொத்த தொகை ரூ. 1 இலட்சம் உள்ளிட்ட நிதி ஆதாரங்களை தமிழக அரசிடம் பெற்று வழங்கிய மாவட்ட ஆட்சியர் மற்றும் நேர்முக உதவியாளர் (சத்துணவு) மாவட்ட மையம் நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
துணைத்தலைவர் ஆர் செல்லக்கண்ணு நன்றி கூறினார். கூட்டத்தில் ஆர். கல்யாணசுந்தரம், வி.ராஜேந்திரன், லீலாவதி, ஈஸ்வரி,