Close
செப்டம்பர் 20, 2024 3:53 காலை

கல்வியாளர்கள் சங்கமம் சார்பில் தமிழக முதல்வருக்கு நன்றியும்.. சில கோரிக்கைகளும்…

கல்வியாளர்கள் சங்கமம்

கல்வியாளர்கள் சங்கம் கோரிக்கை

தமிழக முதல்வருக்கு நன்றியையும் சில கோரிக்கைகளையும் கல்வியாளர்கள் சங்கமம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பின் நிறுவனர்  சிகரம் சதிஷ்குமார் வெளியிட்ட அறிக்கை:

பிரதமர் முன்னிலையில் தமிழகத்திற்கான கோரிக்கைகளை,
உரிமைகளை முதல்வர் அவர்கள் வலியுறுத்திக் கேட்டதில் மகிழ்ச்சி.. அதில் மிகமுக்கியமானது. தேசிய அளவில் அலுவல் மொழியாக இந்திக்கு இணையாக தமிழையும் கொண்டுவர வேண்டும் என்பதில் பெருமகிழ்ச்சி.

தேசிய அளவில் நம் தாய் மொழியை முதன்மைப்படுத்த
எடுக்கும் முயற்சிகளுக்கு முன்னோட்டமாக, தமிழ்நாட்டில் தமிழை முதன்மைப் படுத்துவதற்குத் தேவையான அத்தனையும் செய்ய வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள்.

தமிழ்நாட்டில் அரசின் மூலம் வெளியிடப்படும் அரசாணைகள் அத்தனையும் தமிழில் வெளியிடப்பட வேண்டும்.தாய்மொழி யாக இருக்கும் ஒரு மொழியில் அரசாணைகள், அறிவிப்புகள் வெளிவராமல் இருப்பது பெரும் வருத்தத்திற்குரியது.

தொடக்கக் கல்வியை தமிழ்நாட்டில் தாய்மொழியில் மட்டுமே கற்பிக்க வேண்டும் என்பதைச் சட்டமாக்க வேண்டும்.இன்றை க்கு 50 -க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் தமிழ்வழிக் கற்பித்தல் இல்லை என்னும் செய்தியை, மிக முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களில் ( மத்திய , மாநில அரசுகளில்) பணிபுரியும் அனைவருக்கும் தமிழ்மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்பதைச் சட்டமாக்க வேண்டும்.பணிபுரிபவர் களுக்கு இதுவரை தெரியவில்லை என்றாலும், மூன்று ஆண்டுகளுக்குள் கற்றுக்கொள்ள வேண்டும் என சட்டமியற்றுங்கள்.

இங்குள்ள மக்களுக்குப் பணிசெய்பவர்களுக்கு மக்கள் பேசும் மொழி புரியாவிட்டால், அவர்களுக்கு ஏன் இங்கு பணி? பள்ளிப் பாடப் புத்தகங்களுடன் 6 -ஆம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஒரு திருக்குறள் புத்தகத்தை அரசின் மூலமே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  அவர் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top