புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, நம்பூரணிபட்டி அருள்மிகு செண்பக சாஸ்தா அய்யனார் கோவிவில் தினமும் பூஜைகள் நடக்கும் வகையில் அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அறநிலையத்துறைக்கு சொந்தமான அறந்தாங்கி செயல் அலுவலர் நேரடி பார்வையில் உள்ள இந்தக் கோவிலில் 10. 7. 2022 காலை 10:30 மணி வரை கோவில் நடை திறக்கப்படவில்லை. இதனால் கோவிலுக்குச்சென்ற பக்தர்கள் வழிபட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்ப நேரிட்டது.
ஏனெனில் கோவிலை நினைத்த நேரத்தில் திறப்பது, சார்த்துவதும் தான் இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த நிலையை தவிர்க்கும் வகையில், அறநிலையத்துறை அதிகாரிகள் பூஜை செய்யும் பூசாரிகளை சரியான நேரத்தில் கோவில் திறக்க வேண்டும் நடை சார்த்த வேண்டும் என்ற வழிகாட்டு கால அட்டவணை உத்தரவை வழங்க வேண்டும் என மூன்று ஊரார்கள் நம்பூரணிபட்டி, கோவில்பட்டி, மாவிடிப்பட்டி மற்றும் குலதெய்வ குடிமக்கள் வலியுறுத்துகின்றனர்.
இப்பிரச்னையில் அறநிலையத்துறை அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.