Close
செப்டம்பர் 20, 2024 4:10 காலை

வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் கேட்டு சத்துணவு ஊழியர்கள் பேரணி

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் கேட்டு சத்துணவு ஊழியர்கள் நடத்திய பேரணி

தமிழக அரசின் நிரந்தரத் திட்டத்தில் பணியாற்றும் சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியர்களாக அறிவித்து வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் வெள்ளிக்கிழமை புதுக்கோட்டையில் பேரணி நடத்தினர்.

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய பேரணிக்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பெ.அன்பு தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கேரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் எஸ்.சீத்தாலெட்சுமி பேசினர்.

பேரணியை தொடங்கி வைத்து அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஜபருல்லா உரையாற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.ரெங்கசாமி, சத்துணவு ஊழியர் சங்க முன்னாள் மாநில செயலாளர் கு.சத்தி மற்றும் தோழமைச் சங்க நிர்வாகிகள் எஸ்.பால்பிரான்சிஸ், த.ஜீவன்ராஜ், கே.குமரேசன், எம்.முத்தையா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

பேரணியை நிறைவு செய்து சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆ.மலர்விழி சிறப்புரையாற்றி னார். முன்னதாக ஆ.லெட்சுமணன் வரவேற்றார். க.பிச்சைமுத்து நன்றி கூறினார்.

தமிழக அரசின் நிரந்தரத் திட்டத்தில் பணியாற்றும் சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியர்களாக அறிவித்து வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும்பேது வழங்கப்படும் பணிக்கொடையை அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமாகவும், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் உயர்த்தி வழங்க வேண்டும்.

குடும்பப் பாதுகாப்புடன் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.9,000 வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். உணவு மானியத்தை குழந்தை ஒன்றுக்கு ரூ.5 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். சத்துணவு மையங்களுக்கு எரிவாயு சிலிண்டரை அரசே நேரடியாக வழங்க வேண்டும்.

சத்துணவுத் திட்டத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும். அரசு பெண் ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப் போல சத்துணவுவில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கும் 12 மாதம் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் பேரணியில் எழுப்பப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top